Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு கனடாவில் எதிர்வரும் ஜுன் மாதம் 20ஆம் திகதி நடாத்தவிருக்கின்ற Legends & Icons Awards 2026 நிகழ்வின் ‘கௌரவிப்புச் சின்னம் வெளியீடு’ (Trophy launch) இன்றைய தினம் கனேடிய நேரம் காலை 11 மணியளவில் நடைபெற்றது.
கனடாவில் வசிக்கின்ற மருத்துவத்துறை, வர்த்தகத்துறை, ஊடகத்துறை, தொழில்நுட்பத்துறை என பல்துறைசார் வல்லுநனர்கள் கலந்துகொண்ட மேற்படி நிகழ்வில் Legends & Icons Awards 2026 நிகழ்வின் நோக்கம், அதன் எதிர்ப்பார்ப்பு குறித்து புலத்தில் வாழும் எம்மவர்கள் பலரின் கருத்துப்பகிர்வுகள் என்பனவும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.