முதலமைச்சர் விஜயிடம் தமிழ் நாட்டு சட்டசபையில் மே 18 ஐ ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு’ நாளாக நிறைவேற்றுமாறு கோரிக்கை

சிறீலங்கா அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது அரங்கேற்றிய தமிழினவழிப்பை சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி வரும் ஈழத்தமிழர்களுக்கு வலுச் சேர்ப்பதற்கு மே 18 ஐ ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக’ தமிழ்நாடு சட்டசபையின் ஆரம்ப அமர்வில் நிறைவேற்றுமாறு தமிழ் நாட்டு முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நா.உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளர்.

தமிழ்த் தேசியப் பேரவை தலைவரும் நா.உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) தமிழ் நாடு முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய் ஈழத் தமிழ் மக்களின் சார்பாகத் தமிழ்த் தேசியப் பேரவையின் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில்,

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பாரிய சாதனையை முதல் தடவையிலேயே நிலைநாட்டி, தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தாங்கள் பதவியேற்றுள்ளமையையிட்டு தமிழ்த் தேசிய பேரவையினராகிய நாம் மீளவும் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் நாட்டின் ஆட்சியைப் பொறுப்பேற்று நிற்கும் தங்களுக்குள்ள பாரிய பணிச்சுமைகளுக்கு மத்தியில் எமது கீழ்வரும் கோரிக்கையையும் கவனத்திற் கொள்ளுமாறு கேட்டு நிற்கின்றோம்.

சிறீலங்கா அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது அரங்கேற்றிய தமிழினவழிப்பை நினைவுகூரும் வகையில், கடந்த 2009 ற்குப் பின்னர் ஆண்டுதோறும் மே 18 ஐ ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக’ ஈழத்தமிழ் மக்கள் பிரகடனம் செய்து, அந்நாளில் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரமாக ஒன்றுகூடி நினைவு கூர்ந்து வருகின்றார்கள்.

ஈழத்தமிழ் மக்களது மேற்படி நீதிக்கான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றிருந்த அனைத்துக் கட்சிகளதும் ஆதரவுடன் ஈழத்தமிழர் மீது இடம்பெற்றது இனவழிப்பு என்றும், அதற்கு சர்வதேச குற்றவியல் விசாரணை அவசியம் என்றும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற பட்டிருந்தது.

அந்நேரத்தில் தங்களது கட்சி நிறுவப்பட்டிருக்கவில்லை ஆயினும், அதன் பின்னர் தமிழக வெற்றிக்கழகம் தோற்றம் பெற்று, அதன் முதலாவது தேர்தலில் பெரு வெற்றியீட்டி தாங்கள் முதலமைச்சராகப் பதவியேற்று ள்ளீர்கள். இந்நிலையில் தாங்களும் தங்களது தலைமையிலான தமிழ்நாடு அரசாங்கமும் ஈழத்தமிழர் மீது இடம்பெற்றது.

இனவழிப்பு அதற்குச் சர்வதேச குற்றவியில் விசாரணை அவசியம் என்ற அதே நிலைப்பாட்டிலே மிகவும் இறுக்கமாகவும் உறுதியாகவும் பயணிப்பீர்கள் என்ற செய்தியை அனைத்துத் தரப்புகளுக்கும் வழங்கும் வகையில், மேற்படி 2013 ஆம் ஆண்டு சட்டசபைத் தீர்மானத்தை ஒட்டிய ஓர் தீர்மானத்தை, இம் மே மாதத்தில் கூடும் தமிழ்நாடு சட்டசபையின் ஆரம்ப அமர்விலேயே தங்களது தலைமையில் நிறைவேற்றுவது ஈழத்தமிழ் விவகாரத்தில் தமிழ்நாட்டில் ஓர் தொடர்ச்சியான உறுதியான நிலைப்பாடு உள்ளமையை வெளிப்படுத்துவதாக அமையும்.

அதன் மூலம், ஈழத் தமிழினம் மீது நீங்கள் காட்டும் அக்கறையானது, கொடிய இனவழிப்புக்கு சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி வரும் ஈழத்தமிழர்களுக்கு வலுச் சேர்ப்பதாகவும் அமையும் என்பதுடன் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர் இதயங்களில் நீங்காத இடத்தை தங்களுக்கு வழங்கும் என்பதையும் தெரிவித்து, மீண்டும் எமது உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி

Fuel_1200px_22_10_17

எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மற்றுமொரு விலை உயர்வு அவசியம்: ஜனாதிபதி அறிவிப்பு

May 13, 2026

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், அதற்கமையவே எரிபொருள் விலை உயர்வு போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர

1581352014-UNP-contest-general-election-under-Elephant-B

விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததன் மூலம் ஜனாதிபதி அநுர இராஜதந்திர நடைமுறைகளை மீறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குற்றச்சாட்டு

May 13, 2026

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி. ஜோசப் விஜய்க்கு (C. Joseph Vijay) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க