சென்னை:
தமிழக முதல்வராகப் பதவியேற்ற விஜய், தனது முதல் உரையிலேயே “தமிழகத்தின் கடன் சுமை 10 லட்சம் கோடி” எனக் குறிப்பிட்டதற்கு, முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். தவெக அரசின் முதல் நடவடிக்கைகளை வரவேற்ற ஸ்டாலின், அதே சமயம் சில நிதியியல் நுணுக்கங்களையும் விஜய்க்குச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். ஆனால், எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீர்கள். மக்களுக்குக் கொடுக்க மனசும் ஆட்சித் திறமையும்தான் வேண்டும். நாங்கள் கடந்த 5 ஆண்டுகளில் கோவிட் மற்றும் ஒன்றிய அரசின் பாரபட்சத்தை மீறியே பல திட்டங்களைச் செயல்படுத்தினோம். தமிழகத்தின் கடன் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள்ளேதான் இருக்கிறது. நடைமுறைக்குச் சாத்தியமானதைச் செய்வேன் எனக் கூறிவிட்டு, இப்போது கஜானா காலி என மக்களைத் திசைதிருப்ப வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாகப் பதவியேற்பு விழாவில் பேசிய முதல்வர் விஜய், “தமிழ்நாட்டில் 10 லட்சம் கோடிக்கும் மேல் கடன் உள்ளது. ஒரு பெரிய சுமையை என் மீது ஏற்றி வைத்துவிட்டுச் சென்றுள்ளார்கள். இது குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்” எனக் கூறியிருந்தார். விஜய்யின் இந்த விமர்சனத்திற்குப் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளது, தமிழக அரசியலில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான மோதல் இப்போதே சூடுபிடித்துள்ளதைக் காட்டுகிறது.
#StalinVsVijay #TN_Politics #BreakingNews #May10 #VijayAsCM #DebtCrisisTN #WhitePaper #ThalapathyVijay #DMK #TVK #NewGovernmentTN #FinanceIssues #PoliticalWar #StalinSpeech #VijaySpeech #ElectionResults2026 #TamilNews #Governance #VictoryForVijay #TN_Assembly_“`