காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை (8) புறப்பட்ட பயணிகள் கப்பல் நடுக்கடலில் பழுதடைந்ததால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்ட கப்பல், இரவு 11 மணியளவிலேயே நாகப்பட்டினத்தை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நடுக்கடலில் பழுதடைந்த பயணிகள் கப்பலை மீன்பிடி படகுகள் இழுத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.