சென்னை:
தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவான மிக முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளார். தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக-வின் தலைவர் விஜய்யைப் பதவியேற்க அழைக்காமல் ஆளுநர் தாமதப்படுத்துவது ஜனநாயக விரோதமானது என அவர் சாடியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “மக்கள் தீர்ப்பின்படி விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதே சரியானது. 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைக் காட்டிவிட்டுப் பதவியேற்க வாருங்கள் என ஆளுநர் நிபந்தனை விதிக்க முடியாது; பெரும்பான்மையைச் சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும். தமிழகத்தில் அமித் ஷாவின் அரசியல் விளையாட்டு அரங்கேறுகிறது, பாஜக-வின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என ஆவேசமாகத் தெரிவித்தார். விஜய்யுடன் தொலைபேசியில் பேசியதை உறுதிப்படுத்திய அவர், தவெக-விற்கு ஆதரவு அளிப்பது குறித்து இடதுசாரி கட்சிகளுடன் ஆலோசித்த பின் உயர்நிலை குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். விசிக-வின் 2 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கிடைத்தால், விஜய்யின் பலம் 114-ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
#Thirumavalavan #VCK #Vijay #TVK #TNGovernor #BreakingNews #May7 #TamilNaduPolitics #ThalapathyVijay #VijayAsCM #MajorityTest #AmitShah #BJPResistance #Democracy #ElectionResults2026 #NewGovernmentTN #StalinVsVijay #PoliticalTurningPoint #LeftParties #VijayMakkalIyakkam_“`