சென்னை:
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணைத் தொட முடியாமல் போனதற்கு 12 தொகுதிகளில் ஏற்பட்ட நூலிழைத் தோல்விகளே முக்கியக் காரணமாக அமைந்துள்ளன. இந்தத் தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருந்தால், தற்போது நிலவும் அரசியல் இழுபறி இன்றி விஜய் நேரடியாகப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்திருக்க முடியும்.
தேர்தல் முடிவுகளின்படி, திருக்கோவிலூரில் வெறும் 285 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வெற்றியைப் பறிகொடுத்துள்ளது. அதேபோல் விக்கிரவாண்டி, குளித்தலை, பழனி, கோவில்பட்டி, ஊட்டி ஆகிய 5 தொகுதிகளில் 1,000-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி ஏற்பட்டுள்ளது. இது தவிர திண்டுக்கல், கரூர், பாபநாசம், கிள்ளியூர், புதுக்கோட்டை, திருமயம் ஆகிய 6 தொகுதிகளில் 2,000-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். இந்த 12 தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், தவெக-வின் பலம் 120-ஆக உயர்ந்திருக்கும். மேலும் திருவண்ணாமலை, ஏற்காடு, விருத்தாசலம் உள்ளிட்ட 5 தொகுதிகளில் 2,500 வாக்குகளுக்குள் தோல்வி ஏற்பட்டுள்ளது. மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் கைநழுவிய இந்தத் தொகுதிகளே தவெக-வின் தனித்து ஆட்சியமைக்கும் வாய்ப்பைத் தடுத்து நிறுத்தியுள்ளன.
#TVK #Vijay #ElectionResults2026 #TNAssembly #MajorityMark #MissingSeats #BreakingNews #May7 #TamilNaduPolitics #ThalapathyVijay #VijayAsCM #CloseContest #PoliticalAnalysis #Vikkravandi #Karur #Dindigul #NewEraTN #StalinVsVijay #ElectionUpdate #VijayMakkalIyakkam_“`