முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு பன்னாடுகளிடம் நீதி விசாரணையைக் கோரிய ரவிகரன் எம்.பி; உயிர்நீத்தவர்களுக்கும் சபையில் அஞ்சலி செலுத்தினார்

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை இடம்பெற்று 17ஆண்டுகள் ஆகியுள்ளபோதும், இதுவரை நீதி கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழினப்படுகொலைக்கக்கு பன்நாட்டு நீதி விசாரணை தேவை எனவும் கோரியுள்ளார்.
அதேவேளை இறுதிக்கட்ட போர்க்காலப்பகுதியில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டநிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கவேண்டுமெனவும், சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் 06.05.2026இன்று இடம்பெற்ற மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்குப்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பேரவையை தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே,
மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்திலே குறித்த சட்டமூலம் தொடர்பான கருத்துகளுக்குச் செல்ல முன்னர்,
நீதிக்காக காத்திருக்கும் இனத்தின் குரலாக
ஒரு சில கருத்துகளை இப்பேரவையில் முன்வைக்க விரும்புகிறேன்.
இற்றைக்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தீவிலே
எங்கள் இனத்தைச் சார்பாக்கிய ஓர் ஆயுதப்போராட்டம் பல நாடுகளின் உதவியோடு இலங்கை அரசால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
கொத்துக்குண்டுகளிலும் இரசாயனக் குண்டுகளிலும் உலகப்போரியல் அறங்கள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டன.
எங்கள் தமிழர் தாயகத்தின் நிபுணத்துவங்கள் அழித்தொழிக்கப்பட்டன.
எங்கள் முகவரிகள், அடையாளங்கள் அகற்றெடுக்கப்பட்டன. இலட்சக்கணக்கான உறவுகளை போரிலே – முள்ளிவாய்க்காலிலே இழந்தோம்.
ஓர் அரசென்று உங்களிடம் நம்பி ஒப்படைத்த எங்கள் உறவுகளை இன்றளவும் தேடி அலைகிறோம்.
எமது உரிமைக்காய் – எமது இயல்பு இருப்புக்காய் – எமது நலவாழ்வுக்காய் போராடியவர்கள் – எங்கள் உறவுகள் இன்றளவும் உங்கள் சிறைகளில் அரசியல் கைதிகளாய் வாடுகிறார்கள்.
எங்களுக்கான நியாயத்துக்காக உங்களிடமும் பன்னாடுகளிடமும் நீதிக்காக 17 ஆண்டுகளாகக் காத்திருக்கிறோம்.
ஒரு தீவிலே இவ்வாறு நீதிக்காக – நலவாழ்வுக்காக காத்திருக்கும் எங்களுக்கான நீதியைத் தராது நல்லிணக்கம் எவ்வாறு வரும்!
இலங்கை அரசின் நல்லிணக்க மறுப்பின் மற்றோர் ஆண்டு எதிர்வரும் மே 18 உடன் கடக்கிறது.
ஆறாத வடுக்களோடு நீதியை வேண்டியவண்ணம் எங்கள் விடுதலைப் போரிலே உயிரிழந்த எங்கள் மறவர்கள் – பொதுமக்களை இப்பேரவையில் நினைவேந்திக்கொள்கிறோம்.
எமக்கான நீதியை கடந்தகாலங்கள் போல இன்றும் இப்பேரவையின் வாயிலாக பன்னாடுகளிடம் கேட்டுக்கொள்கிறேன் – என்றார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது