கறுமலையூற்று கடற்கரைப் பகுதி விமானப்படையினரால் விதிக்கப்பட்டுள்ள தடை மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயல்!

திருகோணமலை, கறுமலையூற்று கடற்கரைப் பகுதிக்கு மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு விமானப்படையினரால் விதிக்கப்பட்டுள்ள தடையானது மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையும் சுதந்திரத்தையும் பறிக்கும் செயலாகும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை (05) ஜனாதிபதி அதிமேதகு அனுரகுமார திஸாநாயக அவர்களுக்கு அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள வெள்ளைமணல் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கறுமலையூற்று கடற்கரைக்கு, செவ்வாய்க்கிழமை (05) காலை முதல் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் செல்வதற்கு விமானப்படையினரால் திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையின் காரணமாக குறித்த கடற்பரப்பை நம்பி வாழ்ந்து வரும் நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்கள் தமது அன்றாடத் தொழிலை முன்னெடுக்க முடியாமல் நிர்க்கதியாகியுள்ளனர்.

முப்பது வருடகால கொடூர யுத்தம் நிலவிய காலப்பகுதியில் கூட இப்பகுதி மீனவர்களுக்கு இவ்வாறானதொரு கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை.

தற்போதைய ஜனாதிபதி அவர்கள் மக்களுக்கான ஒரு புதிய அரசியல் கலாசாரத்தையும், சுதந்திரமான சூழலையும் கட்டியெழுப்ப முயற்சிக்கும் இவ்வேளையில், பாதுகாப்புத் தரப்பினரின் இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகள் அரசாங்கத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகவே அமைகின்றன.

மக்களின் இயல்பு வாழ்வைப் பாதிக்கும் இவ்வாறான செயற்பாடுகளை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே, கறுமலையூற்று கடற்கரையில் மீனவர்கள் தமது மீன்பிடித் தொழிலை சுதந்திரமாக முன்னெடுக்கவும், பொதுமக்கள் கடற்கரையைப் பயன்படுத்தவும் விதிக்கப்பட்டுள்ள தடையை நிரந்தரமாக நீக்க ஜனாதிபதி அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட வேண்டும்.

மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படும் பட்சத்தில் அதற்கு எதிராகத் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தனது அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்

fif

பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

August 24, 2026

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில்

jud

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

August 24, 2026

2013 ஆம் ஆண்டு வவுனியாவில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய

26-6a8afc6b4e102

மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை?

August 24, 2026

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற

NAMAL

மக்கள் பிரச்சினைகளை விடுத்து அநுர தரப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளில் தலையிடுகின்றது!

August 24, 2026

தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம்

dailythanthi_2026-08-24_vrhb80pa_protest

“பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மறியல்; 250 பேர் கைது!”

August 24, 2026

சென்னை சென்னை பாரிமுனையில் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும், அதனைத்

dailythanthi_2026-08-23_qs9w3fhj_13 (1)

“புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும்!” – பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக த.வெ.க அரசு அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்குத்

maalai-malar_2026-08-24_06gims2h_Anbumani

“புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடத்தை அரசு

1200-675-24217931-755-24217931-1747840878798

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து மனுவா?” – பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

August 24, 2026

சென்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை

collage-1700827110

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி!” – வேல்முருகன் வரவேற்பு மற்றும் கோரிக்கைகள்

August 24, 2026

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார். அவரது