சென்னை:
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பார்கி அணை நீர்த்தேக்கத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரைச் சேர்ந்த பாதுகாப்புத்துறை ஊழியர் காமராஜ், அவரது மனைவி கார்குழலி, மகன் தமிழ்வேந்தன் மற்றும் உறவினர்கள் இருவர் அடங்குவர்.
இந்த விபத்து குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீரில் மூழ்கியபோதும் தனது 4 வயது மகனை அணைத்தபடி மரணித்துள்ள தாயின் புகைப்படம் நெஞ்சை உலுக்குகிறது” என வேதனை தெரிவித்துள்ளார். தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் இந்தியா முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களில் மக்களின் கூட்டம் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும், எனவே அந்தந்த மாநில அரசுகள் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆறுதலைத் தெரிவித்துள்ள அவர், மபி படகு விபத்தில் பலியானவர்களுக்குத் தனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்தியுள்ளார்.
#Seeman #NaamTamilarKatchi #NTK #MadhyaPradeshBoatAccident #Jabalpur #BargiDam #Tragedy #Trichy #TamilNaduNews #SafetyFirst #SummerVacation #TourismSafety #Condolence #BreakingNews #May2 #TamilPolitics #LifeSafety #BoatDisaster #Grief #May1Events_