சென்னை:
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இசையமைப்பாளரும் ராஜ்யசபா எம்பியுமான இளையராஜா தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பாடல் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 1988-ல் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்த ‘இது எங்கள் நீதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற “சின்ன தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு” என்ற பாடலை அவர் பகிர்ந்துள்ளார்.
இந்தப் பாடலின் முகப்புப் படத்தில் (Thumbnail), நடிகை ராதிகாவுடன் சிறுவயது விஜய் இருக்கும் புகைப்படமும், அதன் பின்னணியில் ஒரு மாளிகையின் முன் கட்சித் தொண்டர்கள் கொடியேற்றி வெற்றியைக் கொண்டாடுவது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது. “நாலெழுத்து நீ படித்து மண்ணின் மானம் காப்பதற்கு… நீங்கள் தானே நாடாளும் ராஜாக்கள்” என்ற வரிகள் கொண்ட இந்தப் பாடல், தற்போதைய அரசியல் சூழலோடு பொருந்திப் போவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, ‘ஆக்சிஸ் மை இந்தியா’ கருத்துக்கணிப்பில் தவெக 120 இடங்கள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இளையராஜாவின் இந்தப் பதிவு விஜய்யின் வெற்றியை அவர் மறைமுகமாகக் குறிப்பிடுகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
#Ilaiyaraaja #ThalapathyVijay #TVK #IdhuEngalNeedhi #TNElection2026 #ElectionResults #May4 #TamilNaduPolitics #Isaignani #VijayPolitics #TrendingNews #BreakingNews #May2 #YouTubeViral #ChinnaThambi #PoliticalVibe #VijayForCM #AxisMyIndia #TamilCinema #MusicAndPolitics #VoterVerdict