தேனி:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே 5,000 அடி உயரத்தில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழா நேற்று (மே 1) விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பிய போது, மாலை 5 மணியளவில் தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனப்பாதையின் ஒன்பதாவது வளைவில் திடீரென மின்னல் தாக்கியது.
இந்த விபத்தில் கேரள காவல்துறையைச் சேர்ந்த காவலர் அன்சார் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட மொத்தம் 11 பக்தர்கள் காயமடைந்தனர். மின்னல் தாக்கிய வேகத்தில் நிலைதடுமாறி விழுந்ததில் காவலர் அன்சாருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காயமடைந்த தமிழக பக்தர்களான தனலட்சுமி, லோக்மணி, பொன்னுசாமி ஆகியோர் கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் குமுளி மற்றும் பாலாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தேனி மற்றும் இடுக்கி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#KannagiTemple #MangaladeviTemple #LightningStrike #TheniNews #ChitraPournami #KeralaPolice #ForestPath #DevoteesInjured #BreakingNews #TamilNaduNews #Idukki #Thekkady #EmergencyUpdate #NaturalCalamity #SafetyAlert #May1Events #TempleFestival #SpiritualNews_