மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் வயது முதிர்ந்த பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள், அது குறித்து நேற்று(01) மாலை 4 மணியளவில் மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலையடுத்து, மஸ்கெலியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டவர், காட்டு மஸ்கெலியா தோட்டத்தைச் சேர்ந்த 86 வயதுடைய சுப்பிரமணியம் லெட்சுமி என அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஹட்டன் நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்ட பின்னர், மரணப் பரிசோதனைகளுக்காக சடலம் கிளங்கன் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.