சென்னை:
உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் சிலைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் கருத்துக்கணிப்புகள் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
“கருத்துக்கணிப்புகளைப் பொறுத்தவரை ‘அடக்கப் பொறுத்தவர்கள் ஆறப் பொறுங்கள்’ என்பதே எனது பதில். இன்னும் இரண்டு நாட்களில் உண்மை தெரிந்துவிடும்; மே 4-ஆம் தேதி நிச்சயம் நல்ல செய்தி வரும்” என்று அவர் தெரிவித்தார். மேலும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணி அமோக வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும், தேமுதிக போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் கேப்டன் ஆசீர்வாதத்துடன் வெற்றி பெற்று 10 பேரும் சட்டசபைக்குச் செல்வோம் என்றும் பிரேமலதா உறுதியுடன் கூறினார். தேமுதிக மீதான விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், “பழுத்த மரம்தான் கல்லடி படும்; எல்லா விமர்சனங்களுக்கும் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் மூலம் தகுந்த பதில் அளிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
#PremalathaVijayakanth #DMDK #TNElection2026 #CaptainVijayakanth #ElectionResults #May4 #DMKAlliance #StalinAgain #TamilNaduPolitics #BreakingNews #MayDay2026 #PoliticalUpdate #VoterVerdict #CountingDay #TNAssemblyPolls #SuccessNews #May1 #CaptainBlessings #VijayakanthLegacy #TenMLAs