சென்னை:
உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க உறுதியேற்போம் என அறைகூவல் விடுத்துள்ளார். பொதுவுடைமைப் போராளி ஜீவானந்தத்தின் வரிகளை நினைவுகூர்ந்த அவர், உழைப்பாளர் நாள்தான் கொண்டாடப்படுகிறதே தவிர, இன்னும் உழைக்கும் மக்களை உலகம் கொண்டாடவில்லை என்பது வரலாற்றுப் பெருந்துயரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
1886-ல் சிகாகோ நகரில் 8 மணி நேர வேலைக்காகப் போராடி உயிர்நீத்த தொழிலாளர்களின் தியாகத்தையும், 1923-ல் இந்தியாவில் முதன்முதலாகச் சென்னையில் மே தினத்தைக் கொண்டாடிய சிங்காரவேலரின் பெருமையையும் சீமான் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இன்றைய ஆட்சியாளர்கள் பன்னாட்டுப் பெருமுதலாளிகளுக்குச் சேவை செய்யும் தரகு நிறுவனங்களாகச் செயல்பட்டு, தொழிலாளர் உரிமைகளைப் பறிப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், அத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராகத் தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். “இனியும் வெறும் நாளை மட்டும் கொண்டாடாமல், உழைக்கும் மக்களை ஒவ்வொரு நாளும் கொண்டாடுவோம்” என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
#MayDay2026 #Seeman #NaamTamilarKatchi #NTK #LabourDay #WorkersRights #MayDayWishes #Singaravelar #Jeevanandham #LabourDay2026 #UzhaippalarDinam #ChennaiNews #SeemanSpeech #SocialJustice #ProtestForRights #May1