பேராசான் இயற்கையிடம் கற்க மறுப்பதால் ஏற்படும் விளைவே ஆக்கிரமிப்புப் போர்கள் பசுமை அமைதி விருதுகள் விழாவில் பொ.ஐங்கரநேசன் தெரிவிப்பு

இயற்கையே உலகின் தலைசிறந்த பேராசான். பல்லினத்துவமே அது போதிக்கும் மிகப்பெரும் பாடம். இயற்கையின் பல்வகை உயிரினங்களைப் பற்றிப் பாடங்களில் பயிலுகின்ற நாம் அது போதிக்கும் பன்மைத்துவத்தின் எளிய முக்கியத்துவத்தை உள்வாங்குவதில்லை.இதனாலேயே பூமியை எமக்கு ஏற்ற கிரகமாகத் துப்பரவு செய்யும் நோக்கில் ஏனைய உயிரினங்களைக் கொன்றொழித்து வருகின்றோம். இதன் இன்னுமொரு வெளிப்பாடாகவே உலகில் நிலவுகின்ற இனங்களின், மொழிகளின், பண்பாடுகளின், மதங்களின் பன்மைத்துவங்களை அழிக்கும் போக்கும் மேலோங்கி வருகின்றது. பேராசான் இயற்கையிடம் கற்க மறுப்பதன் விளைவே இன்று உலகில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஆக்கிரமிப்புப் போர்கள் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் 2025ஆம் ஆண்டுக்கான பசுமை அமைதி விருதுகள் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.04.2026) யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு தலமை வகித்து உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இயற்கையின் பார்வையில் மண்ணுள் உறையும் புழுக்கள் தொடங்கி வானத்தில் உலாவும் பறவைகள் வரை, சின்னஞ்சிறிய அறுகம் புல் தொடங்கிப் பெரு விருட்சமான ஆலமரம் வரை சகல உயிரினங்களும் சமமானவையே. இயற்கை இவற்றிடையே எந்த ஏற்றத்தாழ்வையும் பார்ப்பதில்லை. ஒவ்வொரு உயிரியையும் – அது உருவத்தில் சிறியதோ பெரியதோ – எதோவொரு முக்கியத்துவம் கருதியே இயற்கை படைத்திருக்கிறது. இயற்கையின் சமநிலைக்கு இந்தப் பல்லினத்துவம் அவசியமானதாகும். இதில் ஏதோவொன்று அழியுமாயினும் இயற்கைச் சமநிலை பெரிதும் பாதிக்கப்படும். ஆனால் பரிணாமத்தின் உச்சியில் கோலோச்சுகின்ற நாம் மனித இனமே பெரிது என்று இறுமாந்து ஏனைய உயிரினங்களின் மீது அறிவிக்கப்படாத போர் ஒன்றை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றோம்.
உலகில் இயற்கையின் மாறுபட்ட சூழமைவின் காரணமாகவே மனித இனத்திலும் அது பேசுகின்ற மொழிகளிலும், கடைப்பிடிக்கின்ற மதங்களிலும், பண்பாட்டிலும் வேறுபாடுகள் நிலவுகின்றன. ஆனால், இயற்கையிடம் இருந்து பல்லினத்துவத்தின் இன்றியமையாமையைக் கற்க முடியாதவர்கள் இதன் பிரதிபலிப்பாக மனித இனத்தின் பன்மைத்துவத்தையும் நிராகரித்து வருகிறார்கள். மொழியால், பண்பாட்டால், மதத்தால் பெரும்பான்மையாக உள்ள இனம் சிறுபான்மை இனங்களின் மொழியையும், பண்பாட்டையும் இல்லாது ஒழிக்கத் துடிக்கின்றது. தனது பெரும்பான்மைப் பலத்துக்குள் அவற்றைக் கரைக்க முயற்சிக்கின்றது. உலகில் நிகழ்ந்துகொண்டிருக்கும் உள்நாட்டுப் போர்கள் பலவற்றுக்கும் பன்மைத்துவத்தை நிராகரிக்கும் இந்தப் பெரும்பான்மை ஆதிக்கப்போக்கே பிரதான காரணமாகும்.
இயற்கையின் வளங்கள் யாவும் அனைத்து உயிரிகளுக்கும் உரித்தானவை. ஆனால், மனிதன் அனைத்து வளங்களும் தனக்கானவை என்பது போலப் பேராசைப் பெருநெருப்பில் இயற்கை வளங்களை அழித்துக்கொண்டிருக்கிறான். அதுவும், வல்லாண்மை நாடுகள் தங்களது நாட்டின் எல்லைகளையும் தாண்டிப் பிறநாடுகளினுள் அத்துமீறி நுழைந்து வளங்களைக் கொள்ளையடித்து வருகின்றன. இதற்காகவே, வேறு காரணங்களைச் சாட்டாகக்கூறி அந்நாடுகளின் மீது பெரும் போர்களையும் தொடுத்து வருகின்றன. இந்தப் பின்னணியிலேயே, எமது மாணவர்களிடம் இயற்கைச் சூழலின் பல்லினத்துவத்தின் முக்கியத்துவத்தையும் இதனூடாக மனித இனத்தின் பன்மைத்துவத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துச்சொல்வது அவசியமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
IMG_9428

விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம்

October 14, 2026

சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம் ஒன்றைத் நிறுவுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார

IMG_9427

திக்கம் வடிசாலையை மீள இயக்க நடவடிக்கை!

October 14, 2026

யாழ்ப்பாணம் திக்கம் வடிசாலையை மீள இயக்கி, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில், நீரியல்

IMG_9425

இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

October 14, 2026

பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, உம்ரா யாத்திரை மேற்கொள்ளத் திட்டமிடும் இலங்கையர்கள் தமது பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போது அவதானத்துடன்

IMG_9424

ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளதால் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.

October 14, 2026

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சிக்கு அதிக ஆதரவு உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அவசரகால நிலை மற்றும்

nsm

மீண்டும் விளக்கமறியலில் நாமல்!

October 14, 2026

சர்ச்சைக்குரிய எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கலில் 1.4 மில்லியன் யூரோவுக்கும் அதிகமான தொகையை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில், பாராளுமன்ற

wor

உலக வங்கிப் பிரதிநிதிகள் – ஜனாதிபதியின் செயலாளர் சந்திப்பு!

October 14, 2026

இலங்கையின் விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் நவீனமயமாக்குதலை நோக்கமாகக் கொண்ட ‘AgriConnect Sri Lanka’ திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர்

th

ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக திக்கம் வடிசாலையை மீளச் செயற்படுத்தத் திட்டம்!

October 14, 2026

திக்கம் வடிசாலையை மீள இயக்குவதற்குச் சாத்தியமான அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், அதனை ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக

ja

கைதடியில் விபத்து; இரு இளைஞர்கள் பலி

October 14, 2026

யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

kek

நீதிமன்ற அவமதிப்பு – கெஹெலிய உள்ளிட்டோருக்கு எதிராக மனு

October 14, 2026

யர்நீதிமன்ற உத்தரவொன்றை அமுல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட

MediaFile_20261013_115703_992

கொழும்பில் 15 தற்காலிக வீடுகள் தீக்கிரை!

October 14, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் – மஹவத்த பழைய ரயில் பாதைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 15 தற்காலிக

Toronto-Election-1536x783

அக்டோபர் 26 நகராட்சித் தேர்தலில் கத்தோலிக்கர்கள் பங்கேற்க கர்தினால் லியோ அழைப்பு!

October 13, 2026

2026 அக்டோபர் 26 திங்கள்கிழமை நகராட்சித் தேர்தலை முன்னிட்டு, டொராண்டோ பேராயர் கர்தினால் பிராங்க் லியோ (Cardinal Frank Leo)

TORONTO ELE1

டொராண்டோ நகராட்சித் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்க சாதனை அளவிலான வாக்காளர்கள்

October 13, 2026

டொராண்டோவின் வரவிருக்கும் 2026 நகராட்சித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த வாரம் நடைபெற்ற ஆறு நாள் முன்கூட்டிய வாக்குப்பதிவில் 2,20,000-க்கும் மேற்பட்ட