“உலகநாடுகள் பலவற்றில் இன்று எரிபொருள் விலை அதிகரிப்பும், நீண்ட வரிசைகளும் காணப்படுகின்ற போதிலும், இலங்கையில் அத்தகையதொரு நிலை ஏற்படாத வகையில் நாட்டைச் சரியான பாதையில் கொண்டு செல்கின்றோம்” என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
‘சொந்தமாக இருக்க ஓர் இடம், அழகான வாழ்க்கை’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், வீடுகளை அமைப்பதற்கான நிதி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக, மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று (29) பயனாளிகளுக்குக் காசோலை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் இ. ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.