அதிகாரிகளின் வார்த்தைகளை நம்பத் தயாரில்லை”: தையிட்டி காணி விவகாரத்தில் உரிமையாளர்கள் காட்டம்!

அதிகாரிகளின் வார்த்தைகளை நம்பத் தயாரில்லை”: தையிட்டி காணி விவகாரத்தில் உரிமையாளர்கள் காட்டம்!
யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் விவகாரத்தில், அரசு அதிகாரிகள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை எனத் தையிட்டி காணி உரிமையாளர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாவட்டச் செயலகத்தில் நடைபெறும் கூட்டங்களின் விபரங்களை மறைப்பதாகவும், சட்ட ரீதியான உறுதிமொழிகளை வழங்கத் தயங்குவதாகவும் காணி உரிமையாளர்கள் தமது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.
காணிகளை விடுவிப்பது தொடர்பாகத் திட்டமிடுவதற்கு நடத்தப்படும் கூட்டங்களுக்குக் காணி உரிமையாளர்கள் அழைக்கப்படுவதில்லை. அக்கூட்டங்களின் அறிக்கைகளைக் கேட்டால் வழங்கப்படுவதில்லை எனவும், அண்மையில் நடந்த கூட்டத்தையே “அது ஒரு கலந்துரையாடல் மட்டுமே” எனக் கூறி அதிகாரிகள் தட்டிக்கழிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
காணி அளவீடு செய்யவிருந்த நாளில் விகாரைக்குள் குருந்தூர் மலை விகாராதிபதி தங்கியிருந்தமை தமக்கு மிகுந்த அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் குறிப்பிட்டனர்.
காணி அளவீட்டின் நோக்கம் காணி விடுவிப்புதான் என்பதை மாவட்டச் செயலரோ அல்லது தெல்லிப்பளை பிரதேச செயலரோ தமது அலுவலகக் கடிதத் தலைப்பில் (Official Letterhead) உறுதிப்பட எழுதித் தர வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருந்தது.
அதிகாரிகள் வழங்க முன்வந்த சாதாரணக் கடிதங்கள் எவ்விதத் திணைக்களக் கோவைக்குள்ளும் (Files) ஆவணமாக இருக்காது. அதிகாரப்பூர்வத் தொடர் இலக்கத்துடன் கூடிய கடிதம் வழங்கப்பட்டால் மட்டுமே அது எதிர்காலத்தில் சட்ட ரீதியான ஆவணமாக இருக்கும் என உரிமையாளர்கள் ஆணித்தரமாகத் தெரிவித்தனர்.
காணிகளை அளந்த பிறகு என்ன நடக்கும் என்பது அதிகாரிகளுக்கே தெரியாது என்பதால்தான், அவர்கள் கடிதத் தலைப்பில் உறுதிமொழி தர மறுக்கிறார்கள் எனத் தையிட்டி மக்கள் கருதுகின்றனர். சட்ட ரீதியான ஆவணம் இன்றித் தமது பூர்வீக நிலங்களை அளக்க அனுமதிப்பது தமக்கு இழைக்கப்படும் அநீதி என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
parliment

2.5 மில்லியன் அமெரிக்க டாலர் சைபர் சம்பவம்: நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க நிதியமைச்சு முடிவு

April 30, 2026

காணாமல் போனதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் விவகாரம் தொடர்பாக, நிதியமைச்சு மே மாதம் 5 ஆம் திகதி

seeman

தமிழர்களின் இன ஓர்மையை சிதைக்கும் இலங்கை இனவாத அரசின் சதியை இருநாட்டு தமிழ் மீனவர்களும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்!-சீமான்

April 30, 2026

தமிழர்களின் இன ஓர்மையை சிதைக்கும் இலங்கை இனவாத அரசின் சதியை இருநாட்டு தமிழ் மீனவர்களும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்என நாம்

thyity1

அதிகாரிகளின் வார்த்தைகளை நம்பத் தயாரில்லை”: தையிட்டி காணி விவகாரத்தில் உரிமையாளர்கள் காட்டம்!

April 30, 2026

அதிகாரிகளின் வார்த்தைகளை நம்பத் தயாரில்லை”: தையிட்டி காணி விவகாரத்தில் உரிமையாளர்கள் காட்டம்! யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள

iran

இலங்கை கிரிக்கெட் மாற்றக் குழுவின் தலைவராக எரான் விக்ரமரத்ன நியமனம்: புதிய யாப்பு மற்றும் மறுசீரமைப்பு குறித்து அறிவிப்பு

April 30, 2026

இலங்கை கிரிக்கெட் (SLC) மாற்றக் குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எரான் விக்ரமரத்ன, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும்

maalai-malar_2026-04-29_qx0ocmbn_sreesaisilks0

சமூக வலைதளப் பிரபலம் நாகலட்சுமி கொ*லையில் அதிர வைக்கும் தகவல்கள்: கணவரின் ஈகோ விபரீதமான பின்னணி!

April 30, 2026

சென்னை: நங்கநல்லூரில் ‘Ready to Wear’ சேலை பிசினஸ் மூலம் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் பிரபலமாக இருந்த தொழில் அதிபர்

collage-down-1777513973

வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 234 வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: தேர்தல் ஆணையம் அதிரடி!

April 30, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 234 தொகுதிகளுக்கும் தலா

dailythanthi_2026-04-30_lol3o75a_kozadi33

கீழடி 11-ம் கட்ட அகழாய்வு: வரிசையாகக் கண்டெடுக்கப்படும் சாயக் கிண்ணங்கள் – வியப்பில் தொல்லியல் ஆய்வாளர்கள்!

April 30, 2026

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ம் கட்ட அகழாய்வில், அடுத்தடுத்து சாயக் கிண்ணங்கள் மற்றும் பழங்காலச் செங்கல்

ka_sengottaiyan

“கருத்துக்கணிப்பு வேறு, மக்கள் தீர்ப்பு வேறு” – 200 இடங்களில் தவெக வெல்லும் என செங்கோட்டையன் உறுதி!

April 30, 2026

சென்னை: “தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்பது குறிப்பிட்ட நபர்களின் தனிப்பட்ட கருத்து; மக்கள் தீர்ப்பு என்பது முற்றிலும் வேறானது” என்று

collage-down-1748402151

சித்ரா பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலையில் பக்தர்களுக்காக 100 இலவசப் பேருந்துகள் இயக்கம்!

April 30, 2026

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு வரும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களின் வசதிக்காக, தற்காலிக பேருந்து நிலையங்களில்

684512279_1543096277856332_8658114898696776537_n copy

தேர்தல் முடிவுகள் நெருங்கும் வேளையில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் இன்று அவசர ஆலோசனை!

April 30, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்

thirumavalavan-vck-2025-06-678bbbedc1311a5ad231b1963628d359

விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ரத்து!

April 30, 2026

சென்னை: கடந்த 2019-ஆம் ஆண்டு இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு எதிராகத்

Ravi

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் திருட்டு: ஆஸ்திரேலியா எச்சரித்த பின்னரே விழித்துக்கொண்ட இலங்கை

April 30, 2026

இலங்கை செலுத்த வேண்டிய கடன் தவணை செலுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஆஸ்திரேலிய அதிகாரிகள் சுட்டிக்காட்டிய பின்னரே, 2.5 மில்லியன்