டொராண்டோவில் அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னலில் இருந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு
டொராண்டோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் படுக்கையறை ஜன்னலில் இருந்து விழுந்து 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 8:15 மணியளவில்North York உள்ள ‘சாக்ஃபார்ம் டிரைவ்’ (Chalkfarm Drive) மற்றும் ‘ஜேன் ஸ்ட்ரீட்’ (Jane Street) பகுதிக்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் நடந்துள்ளது.
அப்பகுதியில் ஏதோ ஒரு விபத்து அல்லது சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், அங்கு சிறுமி உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டறிந்தனர்.
திங்கட்கிழமை சமூக வலைதளத்தில் பதிவிட்ட காவல்துறை, சிறுமியின் உடற்கூறு ஆய்வு அறிக்கை (Autopsy report) வரும் வரை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே தங்கியிருந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.