வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப்பின் மன உறுதி குறித்து வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் பாராட்டு தெரிவித்துள்ளார்.
“பயங்கரமான கொலை முயற்சி”:
தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள லெவிட், மகிழ்ச்சியாகக் கழிய வேண்டிய அந்த மாலைப் பொழுது ஒரு “ஒழுக்கங்கெட்ட பைத்தியக்கார நபரால்” சீர்குலைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“ஜனாதிபதியை கொலை செய்யவும், ட்ரம்ப் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரைக் கொல்லவும் அந்த நபர் திட்டமிட்டிருந்தார்,” என்று அவர் தனது பதிவில் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடந்தவுடன்”இரகசியப் பொலிஸாரால் (Secret Service) ட்ரம்ப் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்தச் சமயத்தில் தான் டிரம்புடன் இருந்ததாகக் குறிப்பிட்ட லெவிட், அந்த இக்கட்டான சூழலிலும் அதிபர் “உண்மையிலேயே அச்சமற்றவராக” (Truly Fearless) காணப்பட்டதாகத் தெரிவித்தார்.
அரசியல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி:
“இத்தகைய அரசியல் வன்முறைகள் முடிவுக்கு வர வேண்டும்” என்ற ட்ரம்ப்பின் கருத்தை மீண்டும் வலியுறுத்திய லெவிட், அனைவரையும் பாதுகாப்பாக மீட்ட சட்ட அமலாக்கத் துறையினருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அமெரிக்கத் தலைமைத்துவத்தின் சிறந்த பண்புகள் இக்கட்டான நேரத்தில் வெளிப்பட்டதாக அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்