விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் கிளிநொச்சியில் உருவாக்கப்பட்ட 2K Agro Products Ltd நிறுவனத்தின் புதிய உற்பத்திப் பொருளான ‘வேர்கடலை பிஸ்கட்’ அறிமுக நிகழ்வு.

விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் கிளிநொச்சியில் உருவாக்கப்பட்ட 2K Agro Products Ltd நிறுவனத்தின் புதிய உற்பத்திப் பொருளான ‘வேர்கடலை பிஸ்கட்’ அறிமுக நிகழ்வு.
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு.முரளிதரன் அகியோரின்
விசேட பங்கேற்புடன் இன்று (21.04.2026) செவ்வாய்க்கிழமை காலை நிறுவனத்தின் வளாகத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது.
விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட 17 பட்டியலிடப்படாத பொதுக் கம்பனிகளில் ஒன்றான இந்நிறுவனம், தனது பங்குதாரர்களாக உள்ள 325 விவசாயிகளிடமிருந்தும், மேலதிகமாக வேறு 200 விவசாயிகளிடமிருந்தும் நிலக்கடலையைக் கொள்வனவு செய்து வருகின்றது.
இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் நிலக்கடலையைப் பெறுமதி சேர் முடிவுப் பொருளாக மாற்றிச் சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளை இந்நிறுவனம் தற்போது முன்னெடுத்துள்ளது.
இதன் ஓர் அங்கமாகவே ‘வேர்கடலை பிஸ்கட்’அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்காலத்தில் கச்சான் பாகுவையும் சந்தைக்கு அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள், விவசாய உற்பத்திகளை வெறுமனே மூலப்பொருட்களாக விற்பனை செய்யாமல், இவ்வாறான பெறுமதி சேர் முடிவுப் பொருட்களாக மாற்றி விற்பனை செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளைப் பெரிதும் வரவேற்றார். அத்துடன், ‘யாழ்ப்பாணத்திலிருந்து வெளிநாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன என்றும் நடைமுறை சாத்தியமானதும், இவ்வாறான உள்ளூர் உற்பத்திப் பொருட்களையும் சர்வதேச ஏற்றுமதித் தரத்துக்குப் பொதியிட்டு வெளிநாடுகளுக்கு நேரடியாக அனுப்ப முடியும்’ என நம்பிக்கை வெளியிட்டார்.
இதன்போது நிறுவனத்தின் பங்காளர்களாக உள்ள விவசாயிகள் பல்வேறு சவால்களை ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
குறிப்பாக, விவசாயப் பயிர்களுக்குக் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்கள், உற்பத்திச் செலவைக்கூட ஈடுசெய்ய முடியாதளவுக்குக் குறைந்த விலையில் விளைபொருட்களை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் மற்றும் இயற்கை பசளைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்குச் சந்தையில் உரிய தனித்துவமும் விலையும் கிடைக்காமை ஆகிய பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டினர்.
விவசாயிகளின் கருத்துக்களுக்குப் பதிலளித்த கௌரவ ஆளுநர் அவர்கள் விளை பொருட்களின் விலைத்தளம்பலைக் கட்டுப்படுத்துவதற்கு விவசாயப் பருவகால நாட்காட்டியொன்று உருவாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இதற்கான தகவல் திரட்டுப் பொறிமுறையை ஏற்படுத்துவது தொடர்பில் பல்கலைக்கழகங்களுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் எவ்வளவு உற்பத்தி செய்தாலும், அவற்றைக் கொள்வனவு செய்து இவ்வாறான பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றும் நிறுவனங்கள் தொடர்ச்சியாகவும் சிறப்பாகவும் இயங்குமாயின் விவசாயிகளின் பல பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிட்டும், எனத் தெரிவித்தார்.
நிகழ்வின் நிறைவாக, நிறுவனத்தின் இயந்திரத் தொகுதிகளையும் அதன் தயாரிப்புச் செயற்பாடுகளையும் கௌரவ ஆளுநர் உள்ளிட்ட அதிதிகள் நேரில் பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் சோதிலட்சுமி, பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் ராஜேஷ்கண்ணா உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள், நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
kasthuri-1-2024-11-0308395fba104cc334646f143d18f661-4x3

இடைத்தேர்தலில் த.வெ.க. வென்றால் காங்கிரஸ் கூட்டணி முறிய வாய்ப்பு: பா.ஜ.க. நிர்வாகி கஸ்தூரி

August 25, 2026

கும்பகோணம்: கஸ்தூரியின் கோயில் தரிசனமும் செய்தியாளர் சந்திப்பும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு வந்த பா.ஜ.க. மூத்த நிர்வாகி கஸ்தூரி, அங்குள்ள

U2-1024x620

“தைரியம் இருந்தால் அந்த மூன்று கோப்புகளை ஓபன் பண்ணுங்க!” – முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி சவால்

August 25, 2026

சென்னை: நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில், ‘போராளி ஓய்வதில்லை’ என்ற தலைப்பில் தி.மு.க.

1200-675-27473574-thumbnail-16x9-megamalai

மேகமலை விவகாரம்: தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை மனு!

August 25, 2026

தேனி: ஆட்சியரின் உத்தரவும் மக்களின் அதிர்ச்சியும் தேனி மாவட்டம், வருஷநாடு, மேகமலை உள்ளிட்ட 98 மலை கிராம மக்களை வெளியேற்றும்

hindutamil-prod_2026-08-24_3sbtyc61_IMGTRBRAJAA210ED3RG16

“விஜய்யின் ஈகோவுக்காகவே பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து!” – டி.ஆர்.பி.ராஜா கடும் விமர்சனம்

August 25, 2026

சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தைத் த.வெ.க. அரசு கைவிட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சென்னை அண்ணா

Eb2zWUlU0AE67ID

சாத்தான்குளம் வழக்கு: தூக்குத் தண்டனை கைதிக்கு 2 நாள் அவசர கால விடுப்பு வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

August 25, 2026

மதுரை: ரகு கணேஷுக்கு அவசர கால விடுப்பு சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று சிறையில்

cham

சமிந்த விஜேசிறிக்கு பிணை

August 25, 2026

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள்

Parliame

22ஐ சவாலுக்கு உட்படுத்தி 21 மனுக்கள் தாக்கல்

August 25, 2026

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்தை சவால் செய்து இதுவரை உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள்

can

மாணவியின் மனிதநேயப் பண்பு!

August 25, 2026

அக்கரப்பத்தனை பகுதியில் ஏ.டி.எம். இயந்திரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த 15,000 ரூபாய் பணத்தை கண்டெடுத்த உயர்தர மாணவி ஒருவர், அதனைத் தாமதிக்காமல்

dd

117ம் பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின் மிக வயதான பெண்!

August 25, 2026

உலகின் மிக வயதான வாழ்ந்துகொண்டிருக்கும் நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானியப் பெண்மணி எதேல் கேட்டர்ஹாம், தனது 117-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்