சென்னை,
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது அரசியல் மேடைகளில் கூறும் ‘குட்டி ஸ்டோரி’கள் விவாதப் பொருளாகி வரும் நிலையில், பிக் பாஸ் ஜூலி விஜய்க்கு எதிராகத் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக, ஜல்லிக்கட்டு காளை குறித்து விஜய் சொன்ன கதை ஆபத்தானது என ஜூலி விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை வனிதா விஜயகுமார் அளித்துள்ள பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
வனிதா தனது பேட்டியில், “ஜூலிக்கு எதிராக வரும் கமெண்ட்கள் அனைத்தும் விஜய் ரசிகர்கள் தான் என்பதற்கு என்ன ஆதாரம்? சமூக வலைதளங்களில் யார் வேண்டுமானாலும் முகமூடி அணிந்து பேசலாம். விஜய் ஒன்றும் யாரையும் திட்டச் சொல்ல மாட்டார்; அவருக்கு அதற்கெல்லாம் நேரமும் இல்லை. அவர் எங்களையே (உறவினர்களை) கண்டு கொள்ளமாட்டார், மக்களுக்காகத் தான் வந்துள்ளார். பிக் பாஸ் சென்றபோதே ஜூலிக்கு பல விமர்சனங்கள் வந்தன, அப்போதெல்லாம் அவருக்கு வெட்கமாக இல்லையா? இப்போது விஜயைப் பிடித்துத் தொங்குகிறார்” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஜூலிக்குக் கருத்துச் சொல்ல உரிமை உண்டு, அவர் திமுகவில் சேர்ந்துள்ளதாகக் கேள்விப்பட்டேன், அது அவர் விருப்பம். ஆனால் தேவையில்லாமல் அடுத்தவர்கள் மீது பழி போடக்கூடாது” என வனிதா அறிவுறுத்தியுள்ளார்.
#Vijay #TVK #VanithaVijaykumar #Julie #BiggBossJulie #ThalapathyVijay #TamilPolitics #TNElection2026 #VanithaSpeech #JulieVsVijay #Jallikattu #SocialMediaWar #VijayFans #TVKVijay #TamilNaduElections #TrendingVideo #CinePolitics #ViralNews #VanithaOpenTalk #VijayMakkalIyakkam