நுவரெலியா கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பம்பரக்கலை PWD லயன் குடியிருப்பு பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதால் மூன்று வீடுகள் மற்றும் உடமைகள் முற்றாக எரிந்து சாம்பல் ஆகி உள்ளன.
குறித்த பகுதியில் நேற்று மாலை 7.30 மணி அளவில் திடீரென தீ பரவல் ஏற்பட்டதால் மூன்று வீடுகளின் உடமைகள் முற்றாக சேதம் அடைந்துள்ளன.
சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் விரைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
அதேநேரம் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை நுவரெலியா பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.