இந்த நாட்டிலே நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும் என்பதுதான் தமிழ் மக்களது பிரதானமான அபிலாசை

இந்த நாட்டிலே ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை புதிய அரசியலமைப்பின் ஊடாக அடைய வேண்டும் என்பதுதான் தமிழ் மக்களது பிரதானமான அபிலாசை. அதோடு தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த பல வன்முறைகளில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த இன அழிப்புக்கான பொறுப்புக் கூறல் சம்பந்தமான முன்னேற்றங்களை இந்த புத்தாண்டில் எதிர்பார்க்கின்றோம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நேற்று (14) மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

உலகமெங்கும் வாழும் அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் சிங்கள மக்களுக்கும் என்னுடைய இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

உண்மையிலேயே இந்த புத்தாண்டு எமது விசேடமாக தமிழ் மக்களுடைய அபிலாசைகள் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொள்கின்றேன். மிக நீண்ட காலமாக இந்த நாட்டிலே தமிழ் மக்கள் ஒரு நிரந்தரமான தீர்வு ஒன்றினை சமாதான முறையில் வாழ்வதற்கான ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள் இலங்கை தமிழ் அரசு கட்சியாகிய நாங்கள் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் சார்பிலே தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்களின் பிரதான கட்சியாக இருக்கின்றது. அந்த வகையிலே இந்த வருடத்துக்குள்ளேயும் நாங்கள் எங்களுடைய மக்கள் சார்பிலே மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை காண வேண்டும் என்பதற்காக எங்களது கடமைகளை சரியாக செய்ய எதிர்பார்க்கின்றோம்.

குறிப்பாக இந்த நாட்டிலே ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை புதிய அரசியலமைப்பின் ஊடாக அடைய வேண்டும் என்பதுதான் எங்களது பிரதானமான அபிலாசை. அதோடு எங்களது பொறுப்பு கூறல் அதாவது தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த பல வன்முறைகளில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த இன அழிப்புக்கான பொறுப்புக் கூறல் சம்பந்தமான முன்னேற்றங்களை நாங்கள் காண வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

அத்தோடு எமது பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறாமல் இருக்கும் மாகாண சபை தேர்தல் வடகிழக்கு மாகாணங்களில் அதை நடைபெற வேண்டும். எங்களது மக்களின் நிலப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்.

இவ்வாறாக தமிழ் மக்கள் தொடர்ச்சியாக முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வுகள் இந்த ஆண்டுக்குள்ளே எட்டுவதற்கான முன்னேற்றகரமான நடவடிக்கைகள் நடைபெற வேண்டும் என்று நாங்கள் இறைவனை பிரார்த்திக்கின்றோம். விசேடமாக நாட்டிலே தற்போது பொருளாதாரத்தினால் மக்கள் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக அரசு ஊழியர்கள் அதாவது ஒரு குறிப்பிட்ட அளவு சம்பளத்துடன் ஒவ்வொரு மாதமும் உழைப்பவர்களுக்கு இந்த பொருளாதார நெருக்கடிகள் மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. இது சம்பந்தமாக நாங்களும் எங்களது கரிசனைகளை வெளிப்படுத்தியிருக்கிறோம்.

அதேபோலதான் அரசாங்கத்தினுடைய இலவசமாக கொடுக்கும் கொடுப்பனவுகளும் கூட அஸ்வசும பயனாளிகளுக்கு மாத்திரம் கிடைப்பது சம்பந்தமாகவும் எமது கவனத்தை செலுத்தியிருக்கிறோம். அத்தோடு இந்த அஸ்வசும பயனாளிகளின் தெரிவுகள் சம்பந்தமாக கிடைக்க வேண்டியவர்களுக்கு கிடைக்கின்றதா என்ற கேள்விகள் இருக்கின்றது.

இருந்தபோதிலும் இந்த நல்நாளிலே எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் நாங்கள் அனைவரும் ஒரு சுபிட்சமான நல்லதொரு எதிர்காலத்தை நோக்கி நாங்கள் அனைவரும் பயணிக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் வாழ்த்தி எனது வாழ்த்து செய்தியை இத்துடன் முடித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

save

சூடான் உள்நாட்டுப் போர் 4-வது ஆண்டில் நுழைவு: 120 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை கனடா உறுதி செய்தது

April 16, 2026

சூடானில் நிலவும் உள்நாட்டுப் போர் அதன் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் நிலையில்,

BTF_1

இலங்கையின் தந்திரத்துக்கு சர்வதேச சமூகம் பலியாகக்கூடாது – பிரித்தானிய தமிழர் பேரவை

April 16, 2026

இலங்கையில் இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றங்களுக்கு உள்நாட்டு நீதிப்பொறிமுறை மூலம் தீர்வு காண முடியாது என்றும், சர்வதேச சமூகம் இதில் விழிப்புடன்

che

மன்னாரில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினை கண்டித்துப் போராட்டம்!

April 16, 2026

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் நிர்வாக சீர்கேடு குறித்து மன்னார் கிளையுடன் இணைந்து பணியாற்றும் தன்னார்வ பணியாளர்கள் நேற்றுக்(15)

ehe

வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 10 பேர் காயம்

April 16, 2026

எஹெலியகொடை நகரில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று ஏனைய வாகனங்களுடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று(15) இரவு

t

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறப்பு!

April 16, 2026

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ்ப்பாணம், உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த அலுவலகத்தினை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர்

ss

மோசடிகளுக்காக இலங்கை வந்த 9 சீனர்கள் கட்டுநாயக்கவில் கைது?

April 16, 2026

கணினி வழி நிதி மோசடிகளைச் முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த 9 சீனர்கள் இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான

death

வயிற்றுவலியுடன் வாந்தி; சிறுமி உயிரிழப்பு – யாழில் சம்பவம்

April 16, 2026

யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எட்டு வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா

tur

துருக்கிப் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு: 9 பேர் பலி

April 16, 2026

தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பாடசாலை

ar

அமெரிக்காவின் செய்தியுடன் ஈரான் சென்றார் பாகிஸ்தான் பீல்ட் மார்ஷல் : ஈரான் அரசு ஊடகம் தகவல்

April 15, 2026

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு முக்கிய மத்தியஸ்தராக உருவெடுத்துள்ள பாகிஸ்தானின் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் (Asim Munir), உயர்மட்டக்

ssds

கனடா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வாய்ப்பு?

April 15, 2026

பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் (Alexander Stubb), கனடா பிரதமர் மார்க் கார்னியுடனான (Mark Carney) தனது முதல் அதிகாரப்பூர்வ

str

நெடுந்தீவு மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை முன்னிறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு

April 15, 2026

நெடுந்தீவு மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரி ‘நெடுந்தீவு கவனயீர்ப்பு போராட்ட ஏற்பாட்டுக் குழு’ போராட்டத்திற்கான

ssss

யாழ்ப்பாணத்தின் 800 ஆண்டுகால வரலாற்றை விளக்கும் புதிய நூல் வெளியீடு

April 15, 2026

பிரபல வரலாற்றுப் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் எழுதிய “Glimpses of an Ancient Civilization, Society and Culture in Jaffna