வடக்கு மாகாணத்தின் மணல் விநியோக நடவடிக்கைகளைக் கையாள விசேட செயலி !

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குளங்களிலிருந்து மணலைக் கழுவி எடுத்து, உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக விற்பனை செய்யும் புதிய பொறிமுறையை விரைவில் உருவாக்கவும், வடக்கு மாகாணத்தின் மணல் விநியோக நடவடிக்கைகளைக் கையாளவும் கண்காணிக்கவும் தனியானதொரு செயலியை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் மற்றும் தூய்மை இலங்கை செயலணியின் மாகாண இணைப்பாளரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகரின் பிரதிநிதியுமான சு.கபிலன் ஆகியோரின் விசேட பங்கேற்புடன், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இக்கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், முல்லைத்தீவு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை, சட்டவிரோத மீன்பிடி ஆகியவற்றுடன் சட்டவிரோதக் கனியவள அகழ்வும் பரவலாக இடம்பெறுகின்றது. குறிப்பாக, மணல் மற்றும் கிரவல் ஆகியன மிக மோசமான முறையில் சட்டவிரோதமாக அகழப்படுகின்றன.

மணல் மாபியாக்கள் யார் என்பது எமக்குத் தெரியும், அவர்களுக்குத் துணைபோகும் அதிகாரிகளையும் நாம் அறிவோம். முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வழங்கப்பட்ட அனுமதிகளைக் கூட முறைகேடாகப் பயன்படுத்தி, அதிக இலாபத்துக்காக யாழ்ப்பாணத்துக்கு மணல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஒரு டிப்பர் லோர்ட் மணல் விற்பனை ஊடாக அண்ணளவாக 80,000 ரூபா வரை இலாபமீட்டுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது, என்று சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் அவர்கள், பொதுமக்கள் மணலைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மணலுக்கான விலையைக் கட்டுப்படுத்தி, அதன் விநியோகச் சங்கிலியை உறுதிசெய்வதில் அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சகல அரச திணைக்களங்களுக்கும் இதில் சமூகப் பொறுப்பு உள்ளது.

மணல் மாபியாக்களுடன் இணைந்து சில அதிகாரிகள் செயற்படுவதாக அறிய முடிகின்றது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு இனி ஒருபோதும் இடமளிக்க முடியாது. அவர்கள் எதிர்காலத்தில் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். எங்கு கனியவளங்களை அகழ முடியும், எவ்வளவு அளவுகளில் அகழ முடியும், விநியோகம் மற்றும் அனுமதிகள் தொடர்பான அனைத்து விடயங்களும் மாவட்டச் செயலாளர் தலைமையிலான மாவட்ட மட்டக் குழுவிலேயே இனி தீர்மானிக்கப்படும்.

இந்த அனுமதிகளில் உள்ளூராட்சி மன்றங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். அவர்களால் உரிய முறையில் செயற்பட முடியாவிட்டால் மாத்திரமே மாற்று வழிகள் குறித்து ஆராயப்படும். இந்தப் புதிய பொறிமுறையை ஒழுங்கமைப்புக்குக் கொண்டுவர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், என்று தெரிவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விரிவான கலந்துரையாடலையடுத்துப் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன:

மணல் அகழ்வு அனுமதிகளுக்கான முன்னுரிமையை உள்ளூராட்சி மன்றங்களுக்கே வழங்குவதென்றும், தனிநபர்களின் விண்ணப்பங்களை மாவட்டக் குழுவுக்குச் சமர்ப்பித்து அதன் ஊடாகத் தீர்மானம் எடுப்பதென்றும் முடிவெடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்றங்களூடான மணல் விநியோகத்தைப் பாரவூர்தி உரிமையாளர் சங்கங்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட அமைப்புக்களின் ஊடாக மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.

மணலைக் கழுவி எடுக்கும் செயன்முறைக்குப் பொருத்தமான குளங்கள் எவை என்பது தொடர்பான அறிக்கையை ஒரு வாரத்தினுள் சமர்ப்பிக்க நீர்ப்பாசனத் திணைக்களம் இணக்கம் தெரிவித்தது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் உரிய தரப்பினர் இணைந்து கள ஆய்வுகளை மேற்கொள்வதுடன், அதனைத் தொடர்ந்து மணலைக் கழுவி எடுப்பதற்கான கேள்விப்பத்திரங்களை கோரவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த தூய்மை இலங்கை செயலணியின் மாகாண இணைப்பாளர் சு.கபிலன், வடக்கு மாகாணத்தின் மணல் விநியோக நடவடிக்கைகளைக் கையாளுவதற்காகத் தனியானதொரு செயலியை உருவாக்கத் தூய்மை இலங்கை செயலணி இணங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் எதிர்காலத்தில் மணல் விநியோகம் தொடர்பான அனைத்து விடயங்களும் இலகுவான மற்றும் வெளிப்படையான கண்காணிப்புப் பொறிமுறைக்குள் கொண்டுவரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர், மாவட்டச் செயலாளர், தூய்மை இலங்கை செயலணியின் மாகாண இணைப்பாளர், சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், விசேட அதிரடிப் படையினர், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், செயலாளர்கள், நீர்பாசனத் திணைக்கணப் பொறியியலாளர், வனவளத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

jail

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது

April 17, 2026

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு

tv

த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

April 17, 2026

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யுனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பன

wat

நான்கு நாட்களில் 20 பேர் நீரில் மூழ்கிப் பலி!

April 17, 2026

கடந்த ஏப்ரல் 12 முதல் நேற்று (16) வரையிலான நான்கு நாட்களில் மட்டும், நீரில் மூழ்கி 20 பேர் துரதிர்ஷ்டவசமாக

jey

நிலக்கரி கொள்வனவு ஊழல் அழுத்தங்கள்; எரிசக்தி அமைச்சர் இராஜினாமா!

April 17, 2026

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தனது பதவியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ

sr air

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் பிரதான அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்

April 17, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின்

chac

லங்கா நிலக்கரி நிறுவனத்தின் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதியால் விசேட ஆணைக்குழு

April 17, 2026

அரசுக்குச் சொந்தமான லங்கா நிலக்கரி நிறுவனம் (Pvt) Ltd அல்லது அதன் பின்வந்த நிறுவனங்களில், நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார

up

15 வயது மாணவி சடலமாக மீட்பு

April 17, 2026

செ.தி. பெருமாள் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் குதித்து, 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இன்று மதியம்

im

சீர்திருத்த வேகத்தைத் தக்கவைக்க இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தல்

April 17, 2026

உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் தளம்பல் நிலைகளால் இலங்கை மீண்டும் அபாயங்களை எதிர்கொண்டுள்ளதால், தனது சீர்திருத்த வேலைத்திட்டங்களில் உறுதியாக இருக்குமாறு

ssdfes

அம்பேத்கரின் சிந்தனைகளை யாராலும் தகர்க்க முடியாது – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

April 17, 2026

சாதி ஒழிப்புக்கு கல்வியை தவிர வேறு ஆயுதம் இல்லை என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசினார். மதுரை

kush

நடைபெறவுள்ள தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது – குஷ்பு

April 17, 2026

“இந்​தத் தேர்​தலில் திமுக-வுக்கு மிகப்​பெரிய ஏமாற்​றம் காத்​திருக்​கிறது. இது முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் திமுக-​வில் உள்ள அனை​வ​ருக்​கும் நன்​றாக தெரி​யும்”

ann

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது – அண்ணாமலை

April 17, 2026

“தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கை நினைவில் வைத்துக்கொண்டு வாக்களியுங்கள்,”

kan

மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை – மக்களவையில் கனிமொழி

April 17, 2026

“மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால், அதனை கேடயமாக வைத்து, தொகுதி மறுவரையறை செய்ய உள்ளீர்கள். பிரதமர் மோடியும், உள்துறை