இலங்கையின் பிரதான பொருளாதார மையங்களுக்கு காய்கறிகளின் வரவு பாரிய வீழ்ச்சி

எரிபொருள் விலையேற்றம் காரணமாக இலங்கையின் பிரதான பொருளாதார மையங்களுக்கு நாள்தோறும் வரும் காய்கறிகளின் அளவு 50 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது.

இது குறித்து தம்புள்ளை விசேட பொருளாதார மையத்தின் வர்த்தக சங்கத் தலைவர் சி.ஏ.சிறிவர்தன கருத்துத் தெரிவிக்கையில்,

போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ள நிலையில், காய்கறிகளுக்கான மொத்த விற்பனை விலையும் பெருமளவு சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இதே காலப்பகுதியில் கெப்பெட்டிபொல பொருளாதார மையத்திற்கு நாள் ஒன்றுக்கு 5.5 இலட்சம் கிலோ முதல் 6 இலட்சம் கிலோ வரை காய்கறிகள் வந்த நிலையில், தற்போது அது வெறும் 1.5 இலட்சம் கிலோவாக குறைவடைந்துள்ளது.

கொழும்பு போன்ற தொலைதூரப் பகுதிகளில் இருந்து பொருளாதார மையங்களுக்கு வரும் மொத்த வியாபாரிகளின் வருகை பெருமளவு குறைந்துள்ளது. மேலும் எரிபொருள் செலவைச் சமாளிக்க முடியாமல், இரண்டு அல்லது மூன்று வியாபாரிகள் ஒன்றிணைந்து ஒரு லொறியில் காய்கறிகளை ஏற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிக வாடகை கொடுத்து காய்கறிகளை எடுத்துச் சென்றாலும், அவற்றைச் சந்தையில் விற்பனை செய்வதில் கடும் சவால்களை எதிர்கொள்வதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

குறிப்பாக ‘பட்டா’, ‘பொலிரோ’ போன்ற சிறிய ரக லொறிகளில் வரும் சிறு வியாபாரிகளின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது. எரிபொருளுக்காக அதிக தொகையைச் செலவிடுவதால், நுகர்வோருக்கு விற்கப்படும் காய்கறிகளின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கொள்வனவாளர்கள் வராத காரணத்தினால், பொதுவாக மாலை வரை நீடிக்கும் பொருளாதார மையங்களின் வர்த்தக நடவடிக்கைகள் தற்போது நண்பகல் 12 மணிக்கே நிறைவடையும் சூழல் உருவாகியுள்ளது.

நேற்றுமுன்தினம் (08) தம்புள்ளை மத்திய நிலையத்துக்கு 15 இலட்சம் கிலோ காய்கறிகள் வந்தன. இருப்பினும், எரிபொருள் நெருக்கடியால் மொத்த வியாபாரிகளின் வருகை பாதியாகக் குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலையில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் நாட்டின் ஒட்டுமொத்த விவசாய விநியோகச் சங்கிலியையும் முடக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதை இந்தத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன என்றார்.

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.