கனடா: பேஷோர் மால் நகைக்கடை கொள்ளை; சந்தேக நபரைத் தேடும் பொலிஸார்

கனடாவின் ஓட்டாவா நகரில் உள்ள பிரபல்யமான பேஷோர் ஷொப்பிங் சென்டரில் (Bayshore Shopping Centre) இடம்பெற்ற துணிகர நகைக்கடை கொள்ளை தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காணப் பொதுமக்கள் உதவியை ஓட்டாவா பொலிஸார் நாடியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி காலை 9:40 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நகைக்கடைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த கண்ணாடிக் கூண்டுகளை உடைத்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

பொலிஸார் வெளியிட்டுள்ள தகவலின்படி சந்தேக நபர் குறித்த விபரங்கள் வருமாறு:

தோற்றம்: சுமார் 18 முதல் 25 வயது மதிக்கத்தக்க கறுப்பின இளைஞர்.

உடல் அமைப்பு: 59 முதல் 68 கிலோ எடை (130 – 150 lbs).

அடையாளம்: சம்பவத்தின் போது அவர் முன்பக்கத்தில் ‘Five Boroughs’ என வெள்ளை நிறத்தில் எழுதப்பட்ட பச்சை நிற ஹூடி (Hoodie) அணிந்திருந்தார். அத்துடன் பிரகாசமான நிறத்திலான கண்ணாடி மற்றும் கருப்பு நிற காற்சட்டை அணிந்து பின்னால் ஒரு பையை (Backpack) மாட்டியிருந்தார்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் சிலவற்றை இலகுவாக அடையாளம் காண முடியும் எனத் தெரிவித்துள்ள பொலிஸார், உள்ளூர் இணைய விற்பனைத் தளங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் நகைகள் விற்பனைக்கு வந்தால் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறித்த நபர் தொடர்பான தகவல்கள் தெரிந்தாலோ அல்லது நகைகள் விற்பனை செய்யப்படுவது குறித்துத் தெரியவந்தாலோ, 613-236-1222 (எக்ஸ்டென்ஷன்: 5116) என்ற இலக்கத்தின் ஊடாக ஓட்டாவா பொலிஸ் கொள்ளை தடுப்புப் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்புவது உறுதி – விஜய்

April 18, 2026

அளவில்லாமல் அராஜகத்தையும் ஊழலையும் செய்து, அளவில்லாமல் பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும் லிமிடெட் கம்பெனி திமுகவை இந்தத் தேர்தலில்

tru

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாவிடின் மீண்டும் குண்டுவீச்சு – ட்ரம்ப் எச்சரிக்கை

April 18, 2026

ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும்

ele dea

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

April 18, 2026

ஹாலி-எல, உடுவர பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வயல் நிலத்திற்கு சட்டவிரோதமான முறையில்

hurm

ஹோமுஸ் நீரிணையை ஈரான் இராணுவம் மீண்டும் மூடியது

April 18, 2026

ஈரான் தனது இராணுவத்தின் மூலம் ஹோமுஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டு அரசு

lal

10 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோருகிறார் அமைச்சர் லால் காந்தா

April 18, 2026

தனது 2025-ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான வெளிப்படுத்தலைத் தவறாகச் சித்தரித்து, அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாகக்

bud

வெள்ளை மாளிகையில் உலக அமைதிக்காக பௌத்த மத வழிபாட்டு நிகழ்வு

April 18, 2026

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், உலக அமைதி மற்றும் நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கத்திற்காக ஆசி வேண்டி, கடந்த

sc

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம்

April 18, 2026

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) எச்சரிக்கை

d

யாழில் நிதி ஒதுக்கப்பட்டும் புனரமைக்கப்படாத வீதி

April 18, 2026

நிதி ஒதுக்கப்பட்ட யாழ்.வடமராட்சி கிழக்கு கேவில் பிரதான வீதி நான்கு மாதங்களுக்கு பின்பும் புனரமைக்கப்படாமல் காணப்படுவதால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Ikkiya

 எரிசக்தி அமைச்சர் மற்றும் செயலாளரின் இராஜினாமா ஒரு கண்துடைப்பு 

April 18, 2026

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் இராஜினாமாவானது நிலக்கரி கொள்முதல் மோசடியைப் பொதுமக்களின்

east

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; விசாரணையில் உள்ள பலவீனங்களை சுட்டிக்காட்டும் புதிய அறிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை, இலங்கையின் நீண்டகால விசாரணைகள் இப்போதுதான் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைக்

bal

அதிமுக தென் மாநிலங்களுக்கு துரோகம் இழைக்கின்றது – மார்க்​சிஸ்ட் கட்​சி​

April 18, 2026

தொகுதி மறுவரையறை திட்​டத்தை ஆதரித்து தென் மாநிலங்​களுக்கு அதி​முக துரோகம் இழைப்​ப​தாக மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன்

st

‘தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல் இருக்​கு’ – பிரேமலதா

April 18, 2026

“தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான்