மனிதப் புதைகுழிகளை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் தொடரும்! – காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம்

மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் மூன்று நாட்களாக அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அங்கு மனித எச்சங்களோ அல்லது வேறு தடயங்களோ கண்டறியப்படாமையினால் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட பகுதி மீண்டும் மூடப்பட்டதாகவும், குறித்த பகுதியில் மனிதப்புதைகுழிகள் இருக்கக்கூடிய ஏனைய சாத்தியமான இடங்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதகுறித்து காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

மட்டக்களப்பு, குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழியொன்று இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி டி.பிரதீபனின் மேற்பார்வையின் கீழ் கடந்த மார்ச் 30ஆம் திகதி அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அப்பகுதியில் மூன்று நாட்களாக அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அங்கு மனித எச்சங்களோ அல்லது வேறு தடயங்களோ கண்டறியப்படாமையினால் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட பகுதி மீண்டும் மூடப்பட்டது.

அந்த மண்ணின் தன்மை மற்றும் நீர் இருப்பு என்பவற்றின் காரணமாக அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதில் தொழில்நுட்ப ரீதியான சிரமங்கள் காணப்பட்ட போதிலும், தொல்பொருள் அகழ்வாராய்ச்சி நுட்பங்களைப் பயன்படுத்தி அப்பகுதி ஆய்வு செய்யப்பட்டது.

அத்தொழில்நுட்பக் குழுவில் தடயவியல் மற்றும் மானுடவியல் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் குற்ற இட ஆய்வு அதிகாரிகள் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.

அதேவேளை எமது அலுவலக அதிகாரிகள் இந்த வழக்கைக் கண்காணித்து வருவதுடன், மூன்று நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளிலும் முன்னிலை வகித்தனர்.

அத்தோடு முதல் நாள் அகழ்வின்போது தமது அன்புக்குரியவர்கள் அவ்விடத்தில் புதைக்கப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் 50 பேர் வரை வருகைதந்திருந்தனர்.

2014 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குருக்கள்மடம் பகுதியில் மனிதப்புதைகுழி இருக்கக்கூடும் என அடையாளப்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து சாட்சியாளர் ஒருவரால் அடையாளம் காண்பிக்கப்பட்ட குறித்த இடங்கள், 2015 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் ஊடாக தரை ஊடுருவல் ரேடார் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அந்த முடிவுகளின் அடிப்படையிலேயே மேற்குறிப்பிட்ட அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறானதொரு பின்னணியில் குறித்த பகுதியில் மனிதப்புதைகுழிகள் இருக்கக்கூடிய ஏனைய சாத்தியமான இடங்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

bal

அதிமுக தென் மாநிலங்களுக்கு துரோகம் இழைக்கின்றது – மார்க்​சிஸ்ட் கட்​சி​

April 18, 2026

தொகுதி மறுவரையறை திட்​டத்தை ஆதரித்து தென் மாநிலங்​களுக்கு அதி​முக துரோகம் இழைப்​ப​தாக மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன்

st

‘தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல் இருக்​கு’ – பிரேமலதா

April 18, 2026

“தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான்

vij

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக விஜய் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு?

April 18, 2026

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக தவெக தலை​வர் விஜய் மீது 3 பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். தவெக

bri

பிரித்தானியாவிலிருந்து இலங்கை மாணவி நாடுகடத்தப்படும் அபாயம்?

April 18, 2026

25 வயதான இலங்கை மாணவி நவோத்யா டி சில்வா (Navodya De Silva), தனது கல்விக்கட்டணத்தைச் செலுத்துவதில் ஏற்பட்ட ஒரு

Cr

இன்னிஸ்பில் பாலியல் கடத்தல் வழக்கு: வீடுகளில் போதைப்பொருள் மற்றும் பெண்கள் மீட்பு – பொலிஸார் சாட்சியம்

April 18, 2026

இன்னிஸ்பில் (Innisfil) பகுதியில் நடைபெற்ற பாலியல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில், பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர். சோதனையின்

se

வர்த்தகத்தில் கனடா ‘மிக மோசமான உத்தியைக்’ கொண்டுள்ளது: அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் சாடல்

April 18, 2026

வாஷிங்டனில் நடைபெற்ற ‘செமாஃபோர் உலகப் பொருளாதார உச்சிமாநாட்டில்’ (Semaphore World Economy summit) உரையாற்றிய அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட்

tru

ஈரானின் யுரேனியத்தை அமெரிக்கா எப்படியாவது கைப்பற்றும் – ட்ரம்ப் எச்சரிக்கை

April 18, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அமெரிக்கா “ஏதாவது ஒரு வழியில்” கைப்பற்றும் என்று

Ndb

NDB வங்கிக்கு சர்வதேச தடயவியல் கணக்காய்வு

April 18, 2026

தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) அண்மையில் வெளிப்படுத்திய உள்நாட்டு நிதி மோசடி குறித்து, சர்வதேச நிபுணர்களைக் கொண்ட முன்னனி நிறுவனம்

cham

சம்பிக்க ரணவக்கவின் தொலைபேசியை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு

April 18, 2026

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கையடக்கத் தொலைபேசியை நீதிமன்ற உத்தரவின்படி, வரும் ஏப்ரல் 29-ஆம் திகதி நீதிமன்றத்தில்

is

காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இஸ்ரேலிய இராணுவீரர் இலங்கையில்?

April 18, 2026

காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அமெரிக்க இஸ்ரேலிய இராணுவீரர் ஒருவர் தற்போது இலங்கையில் உள்ளதாக தெரிவித்துள்ள ஹிந்த் ரஜப் அமைப்பு இது

Air cana

எரிபொருள் விலை உயர்வு: நியூயோர்க்கிற்கான சில விமான சேவைகளை ரத்து செய்கிறது ஏயர் கனடா

April 18, 2026

அமெரிக்க-ஈரான் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், டொராண்டோ மற்றும் மொன்றியலில் இருந்து நியூயோர்க்கின் ஜே.எஃப்.கே (JFK) விமான

rohan silv

பிரதி பாதுகாப்பு அமைச்சரை நீக்குமாறு கோரிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதிப்படுத்துவதற்காக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவை அந்தப் பதவியில்