போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 23 குற்றவாளிகள் அடையாளம்!

நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் 23 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இந்தக் கடத்தல்காரர்கள் அனைவரும் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாகவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர்களைக் கைது செய்வதற்குப் பொலிஸார் தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வந்ததாகவும், இது அனைவரும் அறிந்த ஒரு பகிரங்க ரகசியம் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ஆனந்த விஜேபால, “நாங்கள் சுற்றிவளைப்புகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறோம். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அரசியல்வாதிகளே தொடர்ச்சியாக ஆதரவு வழங்கினார்கள். அது ஒரு பகிரங்க ரகசியம், அது அனைவருக்கும் தெரியும். போதைப்பொருள் கடத்தலில் முதன்மையாக இருப்பது இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளே. இவர்களில் 23 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனைவரும் தற்போது வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் குறித்து நாங்கள் விரிவாக ஆராய்ந்து வருகிறோம்.” என்றார்.

இதேவேளை, சிறுவயதில் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான வன்கொடுமைகளுக்கு உள்ளாகும் சிறுவர்கள், வன்முறையை நோக்கித் தூண்டப்படும் போக்கு அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல விசேட வைத்திய நிபுணர் தர்ஷனி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பிள்ளைகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே விசேட வைத்திய நிபுணர் தர்ஷனி ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்தார்.

pa

ராமநாதபுரத்தில் இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் சிக்கின!

April 18, 2026

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய்

ath

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரானார் கௌதம் அதானி!

April 18, 2026

அதானி குழுமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கௌதம் அதானி, ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தராக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், பல ஆண்டுகளாக ஆசியாவின்

arrest

தனது வீட்டு நாய்களுக்கு பட்டாசு சத்தம் பாதிப்பு எனத் தெரிவித்த பெண்ணைத் தாக்கியவர் கைது

April 18, 2026

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு சத்தம் தனது வீட்டு நாய்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை நிறுத்துமாறு கோரிய அண்டை வீட்டுப் பெண்

murder

சித்தாண்டியில் மதுபானம் வாங்கப் பணம் தராத தாயைக் கொன்ற மகன் கைது!

April 18, 2026

கனகராஜா சரவணன் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபாய் பணம் தராத தாயை, அவரது 19 வயது மகன் தள்ளி வீழ்த்தியதில்

sagara-kariyawasam

முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசாங்கம் சட்ட அமுலாக்க நிறுவனங்களில் தலையிடுகிறது!

April 18, 2026

நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் மீது நேரடி மற்றும் கடுமையான

ca

மீண்டும் கொல்கத்தாவுக்கு தோல்வி

April 18, 2026

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.

sri

தியாகத் தாய் அன்னை பூபதி போன்று நாம் கொள்கை உறுதியோடு பயணிக்க வேண்டும் – சிறீதரன் எம்.பி

April 18, 2026

எமது விடுதலைப் போராட்ட வரலாறு என்பது வெறும் பதிவுகள் அல்ல; அது எமது அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்த வேண்டிய

su

தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர் பேச்சுவார்த்தை

April 18, 2026

முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

sta

தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழக மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்தது பாஜக – மு.க. ஸ்டாலின்

April 18, 2026

“தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழ்நாட்டு மக்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்த பாஜகவுக்கும், அவர்களுடைய ஏவல் அடிமைகளான அதிமுக-வுக்கும்

pi

பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக மக்கள் ஏற்க மாட்டார்கள்

April 18, 2026

“தமிழக கலாசாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,”

po

முன்னாள் எம்.பி சம்பத் அத்துகோரள மீது தாக்குதல்

April 18, 2026

காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள, பிடிகல – பம்பரவான

abu

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸார் தீவிர விசாரணை

April 18, 2026

இலங்கையின் பல பகுதிகளில் பெண்கள் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாகப்