அரச வைத்திய அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு: பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அடிப்படையற்றது – சுகாதார அமைச்சர்

மருத்துவப் பயிற்சிகளை (Internship) நிறைவு செய்த வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கும் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பானது, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அடிப்படையற்ற ஒன்று என சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

எனவே, இதில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படின், நோயாளிகளின் உயிரைப் பிணைக் கைதிகளாக்காமல், நீதிமன்றத்தின் ஊடாகப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளுமாறு அவர் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு அறிவித்துள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து இன்று (04) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

“நியாயமான காரணங்களுக்காகப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுமாயின் எம்மால் பேச்சுவார்த்தை நடத்த முடியும். ஆனால் இது விவாதிப்பதற்குக்கூட விடயம் ஏதுமில்லாத, அடிப்படையற்ற ஒரு பணிப்புறக்கணிப்பாகும்.

என்னுடன் பிரச்சினை இருக்குமாயின் எனக்குச் சவால் விடுங்கள். அதற்குச் சிறந்த வழி நோயாளிகளின் உயிர்களை இதில் சிக்கவைக்காமல் அவர்களை இதிலிருந்து விடுவிப்பதாகும்.

பயிற்சி நியமனங்களை வழங்குவது சட்டவிரோதமானது எனக் கருதினால், சிறந்த வழி எனக்கு எதிராக நீதிமன்றம் செல்வதாகும். அப்போது நான் ஒரு தரப்பாகவும், நீங்கள் ஒரு தரப்பாகவும் இருந்து இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள முடியும். எனவே, அமைச்சருடன் உள்ள முரண்பாட்டிற்காக மக்கள் மீது பாரத்தைச் சுமத்த வேண்டாம்” எனத் தெரிவித்தார்.

இதேவேளை, பயிற்சி வைத்தியர்கள் அரசாங்க சேவையில் இணைவதற்காக விண்ணப்பிப்பதற்குக் வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்று (04) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவிருந்த நிலையில், அதனை எக்காரணம் கொண்டும் நீடிக்கப் போவதில்லை என அமைச்சர் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார்.

இதற்கமைய, இனிமேல் தாமதமாக விண்ணப்பித்தாலும் அரசாங்க வைத்தியசாலைகளில் பணியாற்றுவதற்கோ அல்லது சம்பளம் பெறுவதற்கோ வாய்ப்பு கிடைக்காது என்றும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

8

“மின்சாரப் பிரச்சனைக்கும், விலைவாசி உயர்வுக்கும் மத்திய அரசை கைக்காட்டுவதா?” – தவெக அரசுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

October 14, 2026

மதுரை: தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான மின்சாரப் பிரச்சினை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றுக்கு மத்திய அரசைக் குற்றம்

7

“எங்க உங்க அப்பாவையே காணோம் – அரசு பேருந்து பெயர் பலகையில் சர்ச்சை வாசகம்!”

October 14, 2026

கடலூர்: புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசுப் பேருந்தின் டிஜிட்டல் பெயர் பலகையில், ஆளுங்கட்சியான திமுகவினரைக்

6

“கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டம் விரைவில் நனவாகும்!” – முதலமைச்சர் விஜய்யிடம் சந்திரபாபு நாயுடு உறுதி!

October 14, 2026

விஜயவாடா: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு அரசு முறைப் பயணமாக இன்று சென்றுள்ளார். அங்கு அவர் ஆந்திர

5

“இடைத்தேர்தல் தோல்வி குறித்து அதிமுக தலைமை ஆலோசிக்க வேண்டும்!” – சி.வி.சண்முகம்!

October 14, 2026

சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட

4

“மற்ற கட்சிக்காரர்களை அழைத்து கட்சியில் இணைப்பது கேவலம்!” – தவெக மீது இபிஎஸ் தாக்கு!

October 14, 2026

சேலம்: தமிழக வெற்றிக் கழகத்தில் போதிய நிர்வாகிகள் இல்லாத காரணத்தால், மற்ற கட்சிக்காரர்களைக் கூவிக்கூவி அழைத்துக் கட்சியில் இணைப்பது மிகவும்

3

“ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க.ஸ்டாலின்!” – ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

October 14, 2026

சென்னை: எஸ்.ஐ.ஆர் நடைமுறையில் மாபெரும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில்,

2

“எத்தனை இளைஞர்களின் குரல்களை பாஜகவால் ஒடுக்க முடியும்?” – மு.க.ஸ்டாலின் கண்டனம்!

October 14, 2026

சென்னை: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் எவ்வித முகாந்திரமுமின்றி திடீரெனக் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, முன்னாள் முதலமைச்சரும்

1

“சென்னையில் ரூ.3,108 கோடியில் பிரதான சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டம்!” – முதல்-அமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்!

October 14, 2026

சென்னை: சென்னை மாநகர மக்களுக்குக் கோடைக்காலத்திலும் எந்தவிதத் தடையுமின்றிச் சீரான குடிநீர் வழங்கும் வகையில், சுமார் 3,108 கோடி ரூபாய்

Gnanasara-Thera

சிறைச்சாலையிலிருந்து வெளியே செல்லும்போது பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கவேண்டும் – ஜனாதிபதி நியமித்த குழு பரிந்துரை

October 14, 2026

சிறைச்சாலையிலிருந்து வெளியே செல்லும்போது பௌத்தமதகுருமார் காவியுடையை அணிவதற்கு அனுமதிக்கும் புதிய சிறைச்சாலை விதிமுறையை நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார முன்மொழிந்துள்ளார். ஞானசார

hiv

இலங்கையில் ஆண்களுக்கு எச்.ஐ.வித் தொற்று அதிகரிப்பு

October 14, 2026

இலங்கையில் எச்.ஐ.வி (HIV) தொற்று அதிகரிப்பதற்கு ஆண்களுக்கிடையில் நடைபெறும் பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக பாலியல் நோய்கள் தொடர்பான

china

கொழும்பு போர்ட் சிட்டியில் சீன பாதாள குழுவின் முக்கியத் தலைவர் கொழும்பில் கைது

October 14, 2026

கொழும்பு போர்ட் சிட்டியில் (Colombo Port City) முதலீடு செய்ய வந்த சீன முதலீட்டாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து, அவர்களிடம்

Saji

அனோஜனின் மரண தண்டனை இரத்துக்கு நன்றி தெரிவித்தார் சஜித்

October 14, 2026

கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவரும், சவூதி அரேபியாவில் பணிபுரியச் சென்றவருமான பொறியாளர் அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை இரத்துச் செய்வதற்கு