உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் நீதிமன்றில் நேற்று நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிவான் என். நிலவன், சந்தேகநபர்களை வரும் ஏப்ரல் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
நீண்டகாலமாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மீது முறையான குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என அவர்கள் தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டனர்.
இந்த வழக்குத் தொடர்பான செய்திகளை வெளியிடும்போது ஊடகங்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என நீதிவான் அறிவுறுத்தியுள்ளார்.