கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதுவேலி பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை (03) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கந்தளாய் பேராதுவேலி பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவன் தனது நண்பர்கள் மூவருடன் இணைந்து கால்வாயில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.