நுவான் துஷார நீதிமன்றத்தில் வழக்கு

2026 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தடையின்மைச் சான்றிதழ் வழங்க மறுப்பதாகத் தெரிவித்து, வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நேற்று(02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா, செயலாளர் பந்துல திஸாநாயக்க, பொருளாளர் சுஜீவ முதலியப்ப மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

2026 ஐபிஎல் தொடருக்காக ரோயல் சேலஞ்சர்ஸ் (Royal Challengers) அணியால் நுவான் துஷார தெரிவு செய்யப்பட்டுர்.

அவர் இதற்கு முன்னர் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனுமதியுடன் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடனான தனது ஒப்பந்தம் 2026 மார்ச் 31 உடன் முடிவடைவதாகவும், அதனைப் புதுப்பிக்கப் போவதில்லை என்றும், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாகவும் அவர் ஏற்கனவே சபைக்கு அறிவித்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட உடல் தகுதித் தரநிலைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி அவருக்கு NOC வழங்க இலங்கை கிரிக்கெட் மறுத்துள்ளது. ஆனால், தனது தற்போதைய உடல் தகுதி மட்டம் தனது முழு வாழ்க்கையிலும் பேணப்பட்ட அதே மட்டத்திலேயே இருப்பதாகவும், முன்னைய ஆண்டுகளில் இது தடையாக இருக்கவில்லை என்றும் துஷாரா வாதிடுகிறார்.

தான் தேசிய அணிக்காகத் தெரிவு செய்யப்பட மாட்டேன் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உடல் தகுதியைக் காரணம் காட்டி அனுமதி மறுப்பது நியாயமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடையின்மைச் சான்றிதழ் வழங்கப்படாவிட்டால், ஐபிஎல் நிர்வாகம் தனக்குப் பதிலாக வேறு ஒரு வீரரை நியமிக்கும் என்றும், இதனால் தனக்குக் கிடைக்க வேண்டிய பெரும் வருமானம் மற்றும் எதிர்கால வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே, தனக்கு தடையின்மைச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள உரிமை உண்டு என அறிவிக்குமாறும், ஐபிஎல் மற்றும் ஏனைய வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கேற்க அனுமதிக்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு இடைக்கால மற்றும் நிரந்தர கட்டளைகளை பிறப்பிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

844137579_1823350292179398_4868269684370359471_n

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

October 12, 2026

ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).

gary

நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி

October 12, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரும் 2026 நோபல் சமாதான பரிசை பெற்றுள்ளவருமான நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின்

Toronto-Election-1536x783

டொரன்டோ மேயர் தேர்தல் சூடுபிடிக்கும் நிலையில், வெறும் வாக்குறுதிகளைத் தாண்டி மேலதிகமானவற்றை எதிர்பார்க்கும் ஸ்கார்பரோ (Scarborough

October 12, 2026

டொரன்டோ மேயர் தேர்தலில் ஸ்கார்பரோ பகுதி ஒரு முக்கிய போர்க்களமாக உருவெடுத்து வருகிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் வேளையில்,

toronto mayor election

அக்டோபர் 26-ஐ முன்னிட்டு முக்கிய பிரச்சினைகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை வழங்கும் உள்ளூர் அமைப்புகள்

October 12, 2026

வரவிருக்கும் நகராட்சித் தேர்தலில் தெரிந்துகொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன. நீங்கள் வேட்பாளர்கள் மற்றும் முன்னணியில் உள்ள பிரச்சினைகள் பற்றி மேலும்

8

“முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரீக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!” – அமைச்சர் ராஜ்மோகன்!

October 12, 2026

சென்னை: முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரிக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கொள்கைக் கூட்டணி:

7

“அதிருப்தி எம்எல்ஏக்கள் வேலுமணி வீட்டில் ஆலோசனை; அதிமுகவில் மீண்டும் விரிசலா?”

October 12, 2026

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனையில்

vikatan_2020_02_59d19f1a_91b8_4e13_9cf5_9b6856d002d4_p8g

“நோபல் பரிசு ‘நவி பிள்ளை’க்கு அரசு சார்பில் பாராட்டு விழா!” – த.வெ.க அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்!

October 12, 2026

சென்னை: அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்ற தமிழர் நவநீதம் நவி பிள்ளைக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த