இனவழிப்புச் செய்த ஸ்ரீலங்கா இராணுவத்தினரது தேவைக்காக காணி அளவீடு செய்வதற்கு எதிரான போராட்டத்திற்கு பூரண ஆதரவு என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் முகாவில் பகுதியில் தமிழ் மக்களது காணிகளை ஆக்கிரமித்து கடந்த 17 வருடங்களாக நிலைகொண்டுள்ள சிறீலங்கா இராணுவத்தினர் 4வது பட்டாலியன் மின் மற்றும் இயந்திரவியல் பகுதி படைகளுக்காக காணிகளை வழங்கும் நோக்கில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை அவர்களது விருப்பத்திற்கு மாறாக அளவீடு செய்து சுவீகரிக்கும் நோக்கில் நாளை வியாழக்கிழமை 02-04-2026 அன்று முகாவில் பகுதியில் நடைபெறவுள்ள அளவீட்டுக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராடத் தீர்மானித்துள்ளனர்.
அவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவை தெரிவித்துக் கொள்வததுடன் அனைத்து சமூக ஆர்வலர்களையும் கலந்த கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
இனவழிப்பு இராணுவ படையணிக்கு ஒரு அங்குல காணியும் வழங்க முடியாது. இனவழிப்பு செய்த படைகள் எவ்வித பொறுப்புக்கூறலும் இன்றி எமது மண்ணில் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது. அவர்கள் முழுமையாக வெளியேற வேண்டும்.