நுரைச்சோலை மற்றும் புத்தளம் களப்புப் பகுதிகளைச் சூழவுள்ள மக்கள் பாதரச நச்சுத்தன்மைக்கு ஆளாகியிருக்கலாம்?

இலங்கைப் பெண்களின் தலைமுடியில் குறிப்பாக புத்தளம் பகுதியில் வாழ்வோருக்கு பாதரசம் உலோகம் அபாயகரமான அளவில் காணப்படுவதாகப் புதிய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இவர்கள் தொழில் ரீதியாக பாதரசத்துடன் நேரடித் தொடர்பு இல்லாதவர்களாவர்.

தரம் குறைந்த நிலக்கரியை எரிப்பதன் மூலம் இலங்கையில் சுற்றுச்சூழல் மாசு மற்றும் பொது சுகாதாரப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஆலோசகருமான ஹேமந்த விதானகே இது குறித்து தெரிவிக்கையில், தரம் குறைந்த நிலக்கரியை எரிக்கும்போது வெளியேறும் பாதரசம் சூழலிலும் கடல்வாழ் உயிரினங்களிலும் தேங்குவதாகவும் இறுதியில் உணவுச் சங்கிலி ஊடாக மனித உடலுக்குள் நுழைவதற்கும் வாய்ப்பு இருப்பதை இந்தத் தரவுகள் காட்டுவதாகத் தெரிவித்தார்.

18 முதல் 44 வயதுக்குட்பட்ட 28 பெண்களின் தலைமுடியில் பாதரச அளவு 1 ppm ஐ விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

1ppm என்பது 2000 ஆம் ஆண்டில் அமெரிக்க தேசிய ஆராய்ச்சி கவுன்சிலால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு அளவாகும்.

சில பெண்களிடம் இந்த அளவு 15.584 ppm வரை உயர்ந்துள்ளது. இது மிகவும் பாரதூரமான நிலையாகும்.

நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் போது அதில் அடங்கியுள்ள பாதரச அளவு குறித்த தெளிவான தகவல்கள் வழங்கப்படுவதில்லை என விதானகே குற்றம் சுமத்தினார்.

நுரைச்சோலை, பனியடிய, நாரக்கல்லிய மற்றும் புத்தளம் களப்புப் பகுதிகளைச் சூழவுள்ள மக்கள் ஏற்கனவே பாதரச நச்சுத்தன்மைக்கு ஆளாகியிருக்கலாம் என அவர் எச்சரித்தார்.

மேலும் இந்த நிலைமை ஜப்பானில் ஏற்பட்ட ‘மினமாட்டா’ போன்றதொரு பாரிய சுகாதார நெருக்கடிக்கு இட்டுச் செல்லக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தரம் குறைந்த நிலக்கரி பயன்பாட்டால் கடற்கரையோர நீர் மற்றும் களப்புகளில் உள்ள மீன்களில் பாதரச அளவு அதிகரிக்கக்கூடும்.

இது குறித்து விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையிடம் பலமுறை கோரியும் இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என அவர் வருத்தம் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் மௌனமும் இத்தகைய தரம் குறைந்த நிலக்கரியைச் சார்ந்திருப்பது பாரிய பொருளாதார மற்றும் சுகாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கையின்படிஇ நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் மாசுக்கள் அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் இருந்தாலும் சமீபகாலமாக அவை கணிசமாக அதிகரித்துள்ளன.

குறிப்பாக 2026 பெப்ரவரி மாத தரவுகளின்படிஇ கார்பன் மோனாக்சைடுஇ நைட்ரஜன் ஆக்சைடுஇ துகள்கள் மற்றும் சல்பர் டை ஆக்சைடு ஆகியவற்றின் வெளியேற்ற அளவு முன்னரை விட அதிகரித்துள்ளது.

இவை அனைத்தும் தற்போது சட்ட ரீதியான எல்லைக்குள் இருந்தாலும்இ நிலக்கரியின் தரம் மற்றும் அதன் நீண்டகால சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து இது பல புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

dailythanthi_2026-04-23_p6g756c0_hennai33

வரலாற்றுச் சாதனை படைத்த தமிழகத் தேர்தல்: 2011-ம் ஆண்டு சாதனையை முறியடித்துப் புதிய மைல்கல்!

April 23, 2026

சென்னை, தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. சுட்டெரிக்கும் கோடை வெயிலையும்

air canada157

எரிபொருள் தட்டுப்பாடு: கனடாவில் ரத்தாகும் விமானங்கள்; உயரும் பயணக் கட்டணங்கள்

April 23, 2026

ஹார்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக விமான எரிபொருள் விலை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் கனடா

_117337117_963b4151-687c-47fd-b0e9-e50e4faf5f6a.jpg

மாலை 5 மணிக்கே சாதனை! தமிழகத் தேர்தல் வரலாற்றில் புதிய மைல்கல் – 82.24% வாக்குப்பதிவு!

April 23, 2026

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இறுதி நிலையை எட்டியுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவிற்குக் கடுமையான கோடை வெயிலையும்

Harshana-Suriyapperuma

திறைசேரி நிதி மாயம்: மின்னஞ்சல் ஊடாக ஊடுருவிய ஹேக்கர்கள் – நிதி அமைச்சின் செயலாளர் விளக்கம்

April 23, 2026

திறைசேரியிலிருந்து சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்ட 2.5 மில்லியன் டாலர் நிதியில், முடிந்தவரை அதிகப்படியான தொகையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக

kanamal

யாழில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நடாத்திய விசேட சந்திப்பு

April 23, 2026

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP)காணாமல் போன நபர்களுடைய குடும்பங்களினை வலுப்படுத்துவதற்கும் OMP ஆணையினை சிறப்பாக நிறைவேற்றுவதற்குமான கூட்டாண்மைகளை

Mujibar Rahuman

சோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதியை விசாரிக்க வேண்டும்!

April 23, 2026

சோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில், ஜனாதிபதி அநுர விடயத்திற்கு

warnig

மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு

April 23, 2026

குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி

government

மொழிகளை பணிகளில் பயன்படுத்துவது குறித்த பின்தொடர் பொறிமுறை

April 23, 2026

சிங்கள மற்றும் தமிழ் மொழிகளைப் படித்த ஊழியர்கள் அதனை பணிகளில் பயன்படுத்துவது குறித்து ஒரு பின்தொடர் பொறிமுறையை நடைமுறைப்படுத்துமாறு நீதி

fue

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் முக்கிய அறிவிப்பு

April 23, 2026

இந்த வருடம், ஜூலை மாதம் இறுதி வரை தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யும் அளவுக்கு எரிபொருள் கையிருப்பு உள்ளதாக புதிய

he

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை

April 23, 2026

உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் பிற காரணங்களினால் சுவாச நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

hur

அமெரிக்காவின் முற்றுகையை மீறி வெளியேறிய 34 ஈரான் கப்பல்கள்

April 23, 2026

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ள போதிலும் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல், அதன் கட்டுப்பாட்டை மீறி, 34 ஈரான் கப்பல்கள் எல்லை தாண்டிச்

rob

வட தமிழக தேர்தல் களத்தில் ரொபோக்கள்

April 23, 2026

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய அம்சங்களை நடைமுறைப்படுத்தி இளம் வாக்காளர்களை கவர்ந்து