அரசுக்கு எதிரான ஒரு பாரிய போராட்டம் – வடமாகாண கடற்தொழிலாளர் சங்கங்கள்

வடமாகாண கடற்தொழிலாளர்களின் விவகாரத்தில் அரசாங்கம் காட்டிவரும் மெத்தனப் போக்கைக் கண்டித்து, அரசுக்கு எதிரான ஒரு பாரிய மக்கள் போராட்டத்தை விரைவில் நடத்தவுள்ளதாகக் கடற்தொழிலாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கலந்துரையாடல்: தற்காலத்தில் கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக தந்தை செல்வா அரங்கத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

சங்கங்கள் கூட்டாக நடத்திய ஊடக சந்திப்பிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் சார்பில் கலந்துகொண்டிருந்த என்.எம்.ஆலம் மேலும் தெரிவிக்கையில், கடந்தகாலத்தில் எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படும்போது போராட்டங்களை நடத்தி அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்தோம். ஆனால், இன்றைய அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஒன்றரை வருடங்களில் எந்தவொரு எதிர்ப்பையும் நாங்கள் தெரிவிக்கவில்லை. காரணம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்தோம்.
அந்த நம்பிக்கை இன்று மெல்ல மெல்ல மறையத் தொடங்கியிருக்கிறது.

லீற்றருக்கு 60 ரூபாய் விலையை அதிகரித்து அரசாங்கம் கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார நெருக்கடியை உருவாக்கி உள்ளது. அந்நாள் பாதிக்கப்பட்டிருக்கும் கடற்றொழிலாளர்களுக்கு மானியம் அல்லது இழப்பீட்டினை வழங்கவேண்டும். அதே சமயம், கடற்றொழிலாளர்களுக்கு கடந்தகாலத்தில் இருந்த அதே பிரச்சினைகள் இன்றும் உள்ளன. அந்த பிரச்சினைகள் குறித்து காணும் விடயத்தில் ஆக மெத்தனப் போக்கை கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சமகாலத்தில் நாம் எதிர்கொள்ளும் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வினை கோரி மிகவிரைவில் வடமாகாணம் அல்லது வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் அரசுக்கு எதிரான பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருக்கிறோம். அந்த போராட்டத்தில் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றாக கலந்துகொண்டு எங்களது பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கவேண்டும் என அழைக்கிறோம்.

miss

கிளிநொச்சியில் 13 வயது சிறுவனைக் காணவில்லை!

April 17, 2026

கிளிநொச்சி பொன் நகரைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pim

280 டொலர் கச்சா எண்ணெய் கொடுக்கல் வாங்கல்: ஆதாரங்களை முன்வைக்குமாறு அரசாங்கம் சவால்

April 17, 2026

அரசாங்கம் ஒருபீப்பாய் கச்சா எண்ணெயை சுமார் 268 டொலர் என்ற அதிக விலைக்கு கொள்வனவு செய்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு

dddd

மத்திய ஒன்ராறியோ – ஒரிலியாவில் வெள்ள அபாயம் அதிகரிப்பு: மீட்புப் பணிகளில் ஊழியர்களும் தொண்டர்களும் தீவிரம்

April 17, 2026

மத்திய ஒன்ராறியோவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் பெய்து வரும் பலத்த மழை மற்றும் நீர்மட்டம் உயர்வு காரணமாக

NAMAL

எரிசக்தி அமைச்சர் ஜெயக்கொடியின் ராஜினாமா மிகவும் தாமதமானது – நாமல் ராஜபக்ஷ

April 17, 2026

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியின் பதவி விலகலை விமர்சித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ,

ff

ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் வழிநடத்தல் குழு உறுப்பினர்களது விபரங்களை உள்ளடக்கிய ஊடக அறிக்கை

April 17, 2026

தமிழ்த்தேசியப்பேரவையினால் 15.02.2026 அன்று குடிசார் அமைப்புக்கள், அரசியல் தரப்புக்கள், துறைசார் நிபுணர்கள், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமயத்தலைவர்கள் உள்ளிட்ட

Apo

வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்

April 17, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர்

d

ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறப்பு – டொனால்ட் ட்ரம்ப்

April 17, 2026

ஈரான் கடற்பரப்பில் அமைந்துள்ள சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தற்போது முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும்,

po

பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள லாங்லியில் கத்திக்குத்து: ஒருவர் காயம்

April 17, 2026

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள லாங்லி (Langley), வில்லோபி (Willoughby) பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் நடந்த “திட்டமிட்ட” (Targeted)

hf

மேற்கு ஆசியப் போரினால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை: ஐ.நா

April 17, 2026

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் நெருக்கடியின் நேரடி மற்றும் மறைமுகத் தாக்கங்களால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில்

ku

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி; குமார ஜெயக்கொடிக்கு ஆதரவாக அமைச்சர்கள் தற்காப்பு வாதம்

April 17, 2026

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி தொடர்பான எந்தவொரு ஊழல் விசாரணைகளிலும் முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்குத் தொடர்பிருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை

cacv

கனடாவில் பல பெண்களைத் திருமணம் செய்துகொண்ட நபர் குறித்து பொலிஸார் விசாரணை

April 17, 2026

முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரும், MMA தற்காப்புக் கலை வீரருமான ஜேசன் வாஷிங்டன் (Jason Washington) என்பவர், தனது முந்தைய

5

இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவு

April 17, 2026

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான தூதுக்குழுவினர், 2026 வசந்தகாலக் கூட்டத்தின் (Spring Meetings) போது