வட மாகாணத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றங்கள் தொடர்பாகஇ பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அடிப்படை மனித உரிமை மீறல் முறைப்பாடுகளைச் செய்திருந்தனர். இதன் அடிப்படையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் திங்கட்கிழமை விசாரணைக்கு வருமாறு மூன்று அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.
விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளவர்கள்:
வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்.
மாகாண கல்விப் பணிப்பாளர்.
மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர்.
இந்த இடமாற்றங்கள் “சேவையின் தேவை கருதி” வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் அதில் உள்ள முறைகேடுகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விரிவாக விசாரணை நடத்தவுள்ளது.