திமுக கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் மதுரை மத்திய தொகுதியில் அக்கட்சியின் சார்பில் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி வேட்பாளராக களம் இறங்குவார் என அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி அன்று ஒரே கட்டமாக தமிழக முழுவதும் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் பொது தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அக்கூட்டனையில் இடம்பெற்றிருக்கும் கல்வியாளர் ஏ சி சண்முகம் தலைமையிலான புதிய நீதி கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் புதிய நீதி கட்சியின் தலைவரான ஏசி சண்முகமும், அதிமுக கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமியும் கை சாத்திட்டனர்.
மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக திரைப்பட இயக்குநர் சுந்தர் சி தெரிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தொகுதியில் அவர் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏப்ரல் ஆறாம் திகதி தமிழக சட்டப்பேரவைக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு நாள் என்பதால் அதற்குள் சுந்தர் சி வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி வேட்பாளராக களம் இறங்கி இருப்பது அரசியல் பார்வையாளர்கள் இடத்தில் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனிடையே இயக்குநர் சுந்தர் சி யின் மனைவியும் ,நடிகையுமான குஷ்பூ சுந்தர் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தின் துணைத் தலைவர் என்பதாலும் அதிமுக கூட்டணியில் பாஜகவும் இடம் பிடித்திருப்பதாலும் சுந்தர் சிக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.