யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தராக பதவியேற்றார் பேராசிரியர் வேல்நம்பி

உயர்பட்டப் படிப்புகள் பீடப் பீடாதிப தியாக விளங்கிய சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி திருநாவுக்கரசு வேல்நம்பி (B.Com, M.A. யாழ்ப்பாணம் M., Ph.D சென்னை) இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 12 ஆவது துணைவேந்தராகப் பதவி ஏற்றார்.

பேராசிரியர் வேல்நம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் B.Com பட்டப்படிப்பை கற்று முடித்து பின் வர்த்தகத்துறையில் உதவி விரிவுரையாளராக இணைந்து பல்வேறு படிநிலைகளைக் கடந்து இன்று சிரேஷ்ட இருக்கைப் பேராசிரியராக விளங்குகிறார்.

அவர் தனது சேவைக்காலத்தில் வணிகத்துறைத் தலைவராகவும், மூன்று முறை முகாமைத்துவ – வணிக பீடாதிபதியாகவும், முகாமைத்துவ முதுமாணி இணைப்பாளராகவும், பேரவை உறுப்பினராகவும், பட்டப்பின் படிப்புப் பீடப் பீடாதிபதியாகவும் கல்வி நிர்வாகத்தில் ஈடுபட்டிருந்தார். கற்பித்தலிலும் ஆராய்ச்சியிலும் வெளியீடுகளிலும் கல்வி நிர்வாகத்திலும் மாணவர் நலச் சேவைகளிலும் நீண்ட காலம் நற்பணி புரிந்துள்ளார்.

அவர் முகாமைத்துவ வணிக பீடத்தை ஐந்து துறைகள் கொண்ட பீடமாக வளர்த்தெடுத்ததுடன் சுற்றுலாக் கற்கைநெறியையும் வளர்த்தெடுத்தார். பெரும் எண்ணிக்கையான விரிவுரையாளர் பதவிகளைப் பெற்றுக் கொண்டதும், பீடத்திற்கான புதிய கட்டடத் தொகுதியைத் திருநெல்வேலி கலாசாலை வீதியில் அமைத்ததும், சர்வதேச முகாமைத்துவ-வணிக மாநாடுகளை நடாத்தியதும் பெருமைக்குரிய விடயங்களாகும். மேலும் பட்டப்படிப்புப் பாடவிதானங்களை மேம்படுத்தியதும் முகாமைத்துவ M.A கற்கை நெறிகளை முன்னோடியாக நடாத்தியதும், பீட விரிவுரையாளர்களின் மேற்படிப்புக் கல்விக்கும், ஆராய்ச்சிக்கும் அவர்களின் தொழில்சார் வளர்ச்சிக்கும் உறுதுணையாக விளங்கியதும் குறிப்பிடத்தக்கன.

பேராசிரியர் வேல்நம்பி அவர்கள் தனது பதவிநிலை விடுமுறை காலத்தில் (Sabbatical leave) கிழக்கு இலங்கைப் பல்கலைக்கழகம் மட்டக்களப்பு, திருகோணமலை வளாகம், வவுனியா பல்கலை க்கழகம் ஆகியவற்றில் வருகைப் பேராசிரியராகக் கடமை புரிந்துள்ளார். மேலும் புதுச்சேரிப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களான மதுரை காமராஜர், திருச்சி பாரதிதாசன். கோயம்புத்தூர் பாரதியார், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார். திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலைக்கழகம், அண்ணாமலை சென்னைப் பல்கலைக்கழகங்களுடன் நெருக்கமான கல்வித் தொடர்புகளைப் பேணி வந்துள்ளார். அவருக்குத் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் அவரின் துறை சார்ந்த கல்வியாளர்கள் மத்தியில் மிகுந்த கௌரவம் உண்டு. அவர் பல ஆய்வு நூல்களையும், பாடநூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும், பொதுவான கட்டுரைகளையும் அதிகளவில் எழுதியுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் முப்பது வருடங்களுக்கு மேல் விரிவுரையாளராகக் கடமை யாற்றிய பேராசிரியர் அவர்கள் பெரும் எண்ணிக்கையான மாணவர் அணியினரைச் சிறப்பாகக் கற்பித்தார். அவரின் மாணவர்கள் இன்று உயர் பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பேராசிரியர் அவர்கள் தனது பாடசாலைக் காலத்திலேயே தமிழில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் தனது பாடசாலைக் கல்வியை மல்லாவி மத்திய கல்லூரி, புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரிகளில் கற்றறிந்தார். பேராசிரியர் அவர்கள் தமிழில் சிறந்த புலமை உடையவர். வணிகப் பட்டதாரியாக விளங்கியபோதும் தமிழாய்வில் ஈடுபட்டு முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார். அவர் சிறந்த பேச்சாளர், பட்டிமன்றங்கள், விவாத அரங்குகளில் பங்கு கொண்டு மக்களைக் கவரும் வகையில் பேச்சாற்றல் கொண்டவர். காலம், இடம், பொருள் அறிந்து பேசும் திறன் மிக்கவர். கூட்டங்களுக்குத் தலைமை தாங்கும் தகைமை உடையவர், சமூகத்தால் நன்கு அறியப்பட்டவர். அவரது பாடசாலை நண்பர்களுடனும் பல்கலைக்கழக சகபாடிகளுடனும் சமூகத்துடனும் நெருங்கிய உறவு கொண்டவராக விளங்குகின்றார்.

Hemarathne

பிக்குவால் சிறுமி துஷ்பிரயோகம்: 22ஆம் திகதி வரை பிக்குவுகடகு விளக்கமறியல்!

May 14, 2026

15 வயது சிறுமி ஒருவரை தவறானமுறைக்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அத்தமஸ்தானத்தின் பொறுப்பாளரான பல்லேகம ஹேமரத்ன தேரரை, வரும் 22ஆம் திகதி

hu

பெறுமதிமிக்க பொருட்களை திருடிய இளம் கணவன் மனைவி கைது

May 14, 2026

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீட்டு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளம் தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி

yoshitha-rajapaksa

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு: ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை நிராகரித்தது மேல் நீதிமன்றம்!

May 14, 2026

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு தொடர்பாகப் பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை (Preliminary objection) கொழும்பு மேல்

Screenshot 2026-05-14 115508

அதிமுகவில் உச்சகட்ட மோதல்! ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு; ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் அதிமுக இரண்டாக உடைந்துள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள

p-sanmugam

“100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஜூன் 30-ல் சமாதி!” – பாஜக அரசின் புதிய திட்டத்தை சாடிய பெ. சண்முகம்!

May 14, 2026

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) வரும் ஜூன் 30-ஆம்

3

“தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி

May 14, 2026

சென்னை: “தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” எனத் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசு

collage-down-1714447028

சிறார்கள் கையில் மதுவா? – 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! டாஸ்மாக் எச்சரிக்கை!

May 14, 2026

சென்னை: தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல் டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

1778468918-6452

“லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது!” – நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முதல்வர் விஜய் அதிரடி அறிக்கை!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் 2026-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு

1500x900_834373-kb-munusami

“பதவி எனும் துண்டுக்காக கழகம் எனும் வேட்டியைக் கழற்றாதீர்கள்!” – சி.வி.சண்முகம் தரப்பிற்கு கே.பி. முனுசாமி கடும் கண்டனம்!

May 14, 2026

சென்னை: அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சி.வி. சண்முகம் தரப்பினரின் செயல்பாடுகள் குறித்து,

free

“சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்; அரசு வேலை வழங்கு!” – சுடப்பட்ட மணிகண்டன் மனைவி தூத்துக்குடியில் ஆவேசப் பேட்டி!

May 14, 2026

தூத்துக்குடி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரால் சுடப்பட்ட மணிகண்டனுக்கு நீதி கேட்டு, அவரது மனைவி பொன்மணி தூத்துக்குடியில்

Screenshot 2026-05-13 143435

“திமுக-வின் வாக்குகளைக் காட்டித்தான் நீங்கள் முதல்வர்!” – விஜய் அறிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் அதிரடி பதிலடி!

May 14, 2026

சென்னை: “திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எங்களது வெற்றி” என முதலமைச்சர்

1200-675-26672389-thumbnail-16x9-shan

“எங்களை நீக்க எடப்பாடிக்கு அதிகாரம் இல்லை!” – அதிமுக பிளவு குறித்து சி.வி.சண்முகம் அனல் பறக்கும் பேட்டி!

May 14, 2026

சென்னை: தவெக-வுக்கு ஆதரவு அளித்ததற்காகத் தங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையாகக் கட்சிப் பதவிகளைப் பறித்த எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர்