ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற வரப்பிரசாதம் என்பவரது விசைப்படகையும், படகிலிருந்த கம்ன்ஸ்டன் ராஜ், மினிட்டோ ராயப்பன் ஆகிய 2 மீனவர்களையும் தலை மன்னார் அருகே இலங்கை கடற்படையினர் கடந்த மார்ச் 5 அன்று கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று கிளி நொச்சி நீதிமன்ற நீதிபதி, மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன் பிடித்தால் அபராதம் மற்றும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனைவிதித்துவிடுதலை செய்து உத்தரவிட்டார்.