பெண்ணைக் கிணற்றில் வீசிய தம்பதி கைது!

மட்டக்களப்பு, தாந்தாமலை – நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 24 மணித்தியாலங்களுக்குள் துரிதமாக செயற்பட்ட பொலிஸார், சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர்

மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின் மூலம், காஞ்சிரங்குடா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மற்றும் ஒரு இளைஞன் என மூவர் நேற்று (21) இரவு வவுணதீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கடந்த வியாழக்கிழமை வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு 2 ½ வயது குழந்தையுடன் சென்ற இளம் தாய் ஒருவர் காணாமல் போனார். மறுநாள் வெள்ளிக்கிழமை குறித்த தாய் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டதுடன், அவரது குழந்தை வயல் பகுதியில் அழுது கொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதே கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் மற்றுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டது.

மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் வழிகாட்டலில், விசேட குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் மாவட்ட புலனாய்வுப் பிரிவினர் சிசிடிவி (CCTV) காட்சிகளைப் பரிசோதித்தனர். இதன்போது குறித்த தாயை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி மற்றும் அவருடன் இருந்த பெண் குறித்து தகவல்கள் கிடைத்தன.

வந்தாறுமூலை ஆலையடி வீதியில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், அங்கு மறைந்திருந்த 26 வயதுடைய சோமசுந்தரம் சர்லியாவைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் போது, அவரது கணவரான 34 வயதுடைய வெற்றிவேல் சதீஸ்வரன் மற்றும் அவரது தம்பியான 22 வயதுடைய வெற்றிவேல் தனோஜன் ஆகியோர் வவுணதீவில் வைத்து கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியும் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட கணவன் மனைவி, சம்பவ தினமான வியாழக்கிழமை வந்தாறுமூலையில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து கொக்கட்டிச்சோலை பகுதிக்குச் சென்று, பின்னர் ஆயித்தியமலை பகுதிக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, வவுணதீவு பிரதேச செயலக அலுவலகத்திற்கு முன்னால் குழந்தையுடன் பேருந்துக்காக காத்திருந்த இளம் தாயைக் கண்டு, முச்சக்கர வண்டியை நிறுத்தி எங்கே போவதாகக் கேட்டுள்ளனர். அவர் மட்டக்களப்பு நகருக்குப் போகப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த பெண் தாங்களும் அங்கு செல்வதாகக் கூறி வருமாறு அழைத்துள்ளார். அதற்கு இளம் தாய் முச்சக்கரவண்டியில் போகப் பணம் இல்லை எனக் கூறியபோது, 100 ரூபாய் தந்தால் போதும் எனத் தெரிவித்து இளம் தாயையும் குழந்தையையும் ஏற்றிக்கொண்டு நகரை நோக்கிப் பயணித்துள்ளனர். அப்போது தான் அடகு வைத்த குழந்தையின் தங்க ஆபரணத்தை மீட்கப் போவதாகத் தெரிவித்துக் கொண்டே நகரை வந்தடைந்து குழந்தையுடன் இளம் தாய் இறங்கியுள்ளார்.

இறங்கிய அந்த இளம் தாய்க்குப் பின்னால் குறித்த பெண்ணும் தானும் வருவதாகத் தெரிவித்துப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அங்கு அவர் அடகு வைத்த தங்க ஆபரணத்தை மீட்டெடுத்துக் கொண்ட பின்னர், குறித்த பெண் தாங்கள் மீண்டும் வவுணதீவு செல்வதாகவும், உங்களுடன் இன்னொருவரை ஏற்றி குறைந்த கட்டணத்தில் கொண்டு சென்று விடுவதாகவும் தெரிவித்து அவர்களை மீண்டும் ஆட்டோவில் ஏற்றியுள்ளார். வலையிறவு பாலத்தை அண்மித்த போது, அவருக்கு மயக்க மருந்து கலந்த பழச்சாறு போத்தலைக் குடிப்பதற்கு கொடுத்துள்ளனர். அவர் அதனை வாங்கி குடித்ததையடுத்து மயக்கமடைய ஆரம்பித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த முச்சக்கர வண்டி வலையிறவு பாலத்தைக் கடந்து தாண்டியடி நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில், அங்கு முச்சக்கர வண்டியை நிறுத்தியபோது அதிலிருந்த குறித்த பெண் இறங்கியுள்ளார். அங்கு காத்திருந்த 22 வயதுடைய இளைஞன் முச்சக்கர வண்டியில் ஏறிக்கொண்ட போது, மயக்கத்தில் இருந்த இளம் தாய் தன்னை இறக்கிவிடுமாறு கோரிய நிலையில் முற்றாக மயக்கமடைந்துள்ளார்.

இதையடுத்து அவரது கழுத்தில் இருந்த 5 பவுண் தாலிக்கொடி மற்றும் ஒரு பவுண் தங்கச் சங்கிலியைக் கழற்றிக் கொள்ளையடித்துக் கொண்டு, குழந்தையைக் கொத்தியபுலை வயல் பகுதியில் வீசி எறிந்துவிட்டு, மயக்கமடைந்த இளம் தாயைத் தாந்தாமலை பகுதியிலுள்ள நெல்லிக்காடு வயல் பகுதிக்குக் கொண்டு சென்று, அங்கிருந்த பாழடைந்த கிணற்றில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பி வீட்டிற்குச் சென்றுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்களை அடகு வைத்துப் பணம் பெற்றுள்ளனர்.

அதேவேளை, கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணையும் இதே பாணியில் பழச்சாற்றில் மயக்க மருந்து கொடுத்து மயங்கச் செய்து, அவரின் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டு அந்தக் கிணற்றுக்குள் கொண்டு சென்று போட்டுள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அந்தப் பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

844137579_1823350292179398_4868269684370359471_n

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

October 12, 2026

ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).

gary

நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி

October 12, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரும் 2026 நோபல் சமாதான பரிசை பெற்றுள்ளவருமான நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின்

Toronto-Election-1536x783

டொரன்டோ மேயர் தேர்தல் சூடுபிடிக்கும் நிலையில், வெறும் வாக்குறுதிகளைத் தாண்டி மேலதிகமானவற்றை எதிர்பார்க்கும் ஸ்கார்பரோ (Scarborough

October 12, 2026

டொரன்டோ மேயர் தேர்தலில் ஸ்கார்பரோ பகுதி ஒரு முக்கிய போர்க்களமாக உருவெடுத்து வருகிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் வேளையில்,

toronto mayor election

அக்டோபர் 26-ஐ முன்னிட்டு முக்கிய பிரச்சினைகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை வழங்கும் உள்ளூர் அமைப்புகள்

October 12, 2026

வரவிருக்கும் நகராட்சித் தேர்தலில் தெரிந்துகொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன. நீங்கள் வேட்பாளர்கள் மற்றும் முன்னணியில் உள்ள பிரச்சினைகள் பற்றி மேலும்

8

“முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரீக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!” – அமைச்சர் ராஜ்மோகன்!

October 12, 2026

சென்னை: முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரிக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கொள்கைக் கூட்டணி:

7

“அதிருப்தி எம்எல்ஏக்கள் வேலுமணி வீட்டில் ஆலோசனை; அதிமுகவில் மீண்டும் விரிசலா?”

October 12, 2026

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனையில்

vikatan_2020_02_59d19f1a_91b8_4e13_9cf5_9b6856d002d4_p8g

“நோபல் பரிசு ‘நவி பிள்ளை’க்கு அரசு சார்பில் பாராட்டு விழா!” – த.வெ.க அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்!

October 12, 2026

சென்னை: அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்ற தமிழர் நவநீதம் நவி பிள்ளைக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த