ரி20 உலகக் கிண்ணம்; இந்தியாவும் நியூஸிலாந்தும் மோதுகின்றன!

உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் 90,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு மின்னொளியில் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் இந்தியாவை நியூஸிலாந்து எதிர்த்தாடவுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் வரலாற்று வெற்றியை ஈட்டும் குறிக்கோளுடன் களம் இறங்கவுள்ளன.

ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் சொந்த மண்ணில் சம்பியனான முதலாவது அணி, சம்பியன் பட்டத்தை தக்கவைத்த முதலாவது அணி, மூன்று தடவைகள் சம்பியனான முதலாவது அணி என்ற வரலாற்றுச் சாதனைகளை நிலைநாட்டும் குறிக்கோளுடன் இறுதிப் போட்டியை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா எதிர்கொள்ளவுள்ளது.

தென் ஆபிரிக்காவில் 2007இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ரி20 உலகக் கிண்ணப் போட்டியிலும் கடைசியாக ஐக்கிய அமெரிக்கா மற்றும் கரிபியன் தீவுகளில் கூட்டாக நடத்தப்பட்ட 9ஆவது உலகக் கிண்ண அத்தியாயத்திலும் சம்பியனான இந்தியா 4ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.

அதேவேளை, ரி20 உலகக் கிண்ணத்தை முதல் தடவையாக வென்றெடுக்கும் குறிக்கோளுடன் மிச்செல் சென்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து களம் இறங்கவுள்ளது.

துபாயில் 2021இல் நடைபெற்ற 7ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் அவுஸ்திரேலியாவிடம் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நியூஸிலாந்து, இரண்டாவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.

ரி20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவை எதிர்த்தாடிய 3 சந்தர்ப்பங்களிலும் நியூஸிலாந்து வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்திவந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்தியாவை தென் ஆபிரிக்காவில் 2007இல் 10 ஓட்டங்களாலும் இந்தியாவில் 2016இல் 47 ஓட்டங்களாலும் துபாயில் 2021இல் 8 விக்கெட்களாலும் நியூஸிலாந்து வெற்றிகொண்டிருந்தது.

இந்த இரண்டு அணிகளும் ரி20 உலகக் கிண்ணத்தில் நான்காவது தடவையாக சந்திக்கும் போது நியூஸிலாந்து வெற்றி அலையைத் தொடரவும் இந்தியா தனது தோல்விகளுக்கு பதலடி கொடுக்கவும் முயற்சிக்கும் என்பது திண்ணம்.

இந்த இரண்டு அணிகளும் அரை இறுதிகளில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.

தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாடிய தென் அபிரிக்காவை, ஃபின் அலன் குவித்த ரி20 உலகக் கிண்ண சாதனைமிகு அதிவேக சதத்தின் உதவியுடன் நியூஸிலாந்து 9 விக்கெட்களால் நொக் அவுட் செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

பரபரப்பை ஏற்படுத்திய மற்றைய அரை இறுதிப் போட்டியில் துடுப்பாட்டத்திலும் களத்தடுப்பிலும் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தி இங்கிலாந்தை 7 ஓட்டங்களால் இந்தியா வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

இந்த இரண்டு அணிகளும் உலகக் கிண்ணத்துக்கு முன்னர் விளையாடிய 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 தொடரில் இந்தியா 4 – 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது.

மேலும் இந்தியாவும் நியூஸிலாந்தும் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட 30 சந்தர்ப்பங்களில் 16 – 11 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. 3 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்தன.

இம்முறை இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சம பலம் கொண்ட அணிகளாக தென்படுவதால் இறுதிப் போட்டி இறுக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்றாலும் தனது சொந்த மண்ணில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் இந்தியா விளையாடுவதால் அந்த அணி சம்பியனாவதற்கு அனுகூலமான அணி என கருதப்படுகிறது.

‘வெற்றிபெறுவதற்கு நாங்கள் அனுகூலமான அணி அல்ல என்பதை ஒவ்வொருவரும் அறிந்திருக்கலாம். ஆனால் வெற்றிக் கிண்ணத்தை ஒரு தடவை சுமப்பதற்கு சிலரின் இதயங்கள் நொறுங்குவது பரவாயில்லை என நான் கருதுகிறேன்’ என இறுதிப் போட்டிக்கு முன்னர் நியூஸிலாந்து அணித் தலைவர் மிச்செல் சென்ட்னர் கூறினார்.

இதேவேளை, ‘அவர்கள் நல்ல திட்டத்தோடு வருகை தந்துள்ளார்கள். நாங்களும் நல்ல திட்டங்களைக் கொண்டுள்ளோம். இந்தப் பெரிய இறுதி ஆட்ட மேடைக்கு நாங்கள் தயாராகிவிட்டோம். மற்றையவர்கள் எம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை விட நாங்கள் திறமையாக என்ன செய்யவேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்’ என இந்திய அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் தெரிவித்தார்.

இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு செம்சன், இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ் (தலைவர்), திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஷிவம் டுபே, அக்சார் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரிட் பும்ரா.

நியூஸிலாந்து: டிம் சீஃபேர்ட், ஃபின் அலன், ரச்சின் ரவிந்த்ரா, க்லென் ஃபிலிப்ஸ், மார்க் சப்மன், டெரில் மிச்செல், மிச்செல் சென்ட்னர் (தலைவர்), கோல் மெக்கொன்ச்சி, மெட் ஹென்றிஃ, இஷ் சோதி, லொக்கி ஃபேர்கசன்.

1777567784-death-6

ஒரு காலில் மூன்று வெட்டுக் காயங்களும், கையில் ஒரு காயம் , உடலுக்கு அருகில் சிறிய கத்தி-2.5 மில்லியன்டொலர் சைபர் மோசடி தொடர்பில் இடைநிறுத்தப்பட்ட நிதி அமைச்சின் அதிகாரியின் மரணம் குறித்த மேலதிக தகவல்கள் 

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 | இரவு 10:17 மணி சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் கொள்ளை சம்பவம்

Uni

இன அழிப்பை மூடி மறைக்கும் அரசுக்கு எதிராக அணி திரள வேண்டிய காலகட்டத்தில் நாம் மே தினத்தை நினைவு கூருகின்றோம் – யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

April 30, 2026

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கமானது மே தினம் தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றை இன்று வியாழக்கிழமை (30) வெளியிட்டுள்ளது. அந்த

f

வட்டுக்கோட்டை தீர்மானம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள்; மீண்டும் தவறவிடப்போகிறோமா?

April 30, 2026

வட்டுக்கோட்டை தீர்மானம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி. மீண்டும் தவறவிடப்போகிறோமா? என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

put

புடினுடன் தொலைபேசி உரையாடல்; ட்ரம்ப் முக்கிய கோரிக்கை

April 30, 2026

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நடைபெற்ற 90 நிமிட தொலைபேசி உரையாடலில், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பாக உதவி செய்யத்

RBKOMUGNEVG3ZHUJGP6GE3XTP4

டொரன்டோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க படகுச் சங்கம் தீக்கிரை: திட்டமிட்டுத் தீ வைக்கப்பட்டதாக பொலிஸார் சந்தேகம்!

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – டொரன்டோவின் எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் பல தசாப்தங்களாக இயங்கி வந்த படகுச் சங்கத்தின் கட்டடம்

684105632_993797889662066_5036282836550723148_n

யாழில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்ற தேனிசை செல்லப்பா புகழ் வணக்க நிகழ்வு!

April 30, 2026

பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு, போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இன்றையதினம் வியாழக்கிழமை (ஏப்ரல்

1777557288-monk-6

 போதைப்பொருள் கடத்தலைத் தொடர்ந்து பௌத்த தேரர்கள் வெளிநாடு செல்வதற்கான சட்டங்கள் அறிமுகம்

April 30, 2026

போதைப்பொருள் கடத்தலைத் தொடர்ந்து பௌத்த தேரர்கள் வெளிநாடு செல்வதற்கான சட்டங்கள் அறிமுகம் ஏப்ரல் 30, 2026 – வெளிநாடுகளுக்குப்

Harsha-Harshana-Suriyapperuma

திறைசேரி செயலாளருடன் CoPF சந்திப்பு: “2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 10 பரிமாற்றங்கள் திருடப்பட்டுள்ளன

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டிய 10 அரசாங்க கடன் திருப்பிச் செலுத்தும்

death-pictures-4i5d2eg6pdb913xl

வவுனியாவில் கனடா பிரஜை திடீர் மரணம்: பொலிஸார் விசாரணை

April 30, 2026

வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர், சிகிச்சை பலனின்றி தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

heat-1554460827

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: இன்று 17 இடங்களில் சதமடித்த வெப்பம் – வேலூரில் 108.32°F பதிவு!

April 30, 2026

சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மாநிலத்தின் 17

21

“வெற்றி பெற்றவுடன் வேறு எங்கும் செல்லாதீர்கள், பனையூர் வந்துவிடுங்கள்” – தவெக வேட்பாளர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு!

April 30, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது

rcmp1

கஞ்சா விற்பனை நிலைய சோதனைக்கு எதிர்ப்பு: பொலிஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் நால்வர் மீது வழக்கு

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – நோவா ஸ்கோடியாவின் பொட்லோடெக் (Potlotek) பகுதியில் உள்ள முதற்குடி மக்கள் (First Nations) வசிக்கும்