அரசாங்கம் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இந்த நாடக அரசியல் விரைவில் முடிவுக்கு வரும் – – மனோ கணேஷன்

அரசாங்கம் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இந்த நாடக அரசியல் விரைவில் முடிவுக்கு வரும். நிலக்கரி ஊழல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உண்மையான முகத்தைக் காண்பித்துள்ளது. அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சியின் முகத்தில் இந்த நிலக்கரி மோசடி கரியைப் பூசியிருக்கிறது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இந்த நாடக அரசியல் விரைவில் முடிவுக்கு வரும். தேசிய மக்கள் சக்தி முன்னர் கூறிய பொய்களை முன்னிலைப்படுத்தியே ஆட்சியை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையின்றி பொய்களைக் கூறினர். தற்போது அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

நிலக்கரி ஊழல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உண்மையான முகத்தைக் காண்பித்துள்ளது. தரம் குறைவான நிலக்கரி கொள்வனவினால் இனிவரும் நாட்களில் மின்சார உற்பத்தி குறைவடையும். எனவே மேலதிக மின்சார உற்பத்திக்கு மேலதிகமாக நிலக்கரியை கொள்வனவு செய்ய வேண்டியேற்படும். இதனால் செலவும் அதிகரிக்கும்.

தற்போது நிலக்கரியை விநியோகிக்கும் இந்த விநியோக நிறுவனம், முன்னர் அரிசி இறக்குமதி செய்து அப்போது ஏற்பட்ட மோசடிகளால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது. அவ்வாறு கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனத்துக்கே இந்த அரசாங்கம் நிலக்கரி விநியோகத்துக்கான வாய்ப்பை வழங்கியிருக்கின்றது. இந்த மோசடியால் அரசாங்கத்துக்கு 700 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர்கள் இல்லை என மறுக்கின்றனர்.

அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சியின் முகத்தில் இந்த நிலக்கரி மோசடி கரியைப் பூசியிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஊழல் செய்ததாகவும், தாம் அவ்வாறு இல்லை என்றும் இவர்கள் கூறினர். ஆனால் இன்று அவர்கள் செய்ததையே இவர்களும் செய்துள்ளனர். விரைவில் மீண்டும் எமது ஆட்சி மலரும்.

மக்களுக்கு முறையான ஆட்சி வேண்டுமே தவிர, கண்காட்சியல்ல. தாம் இடதுசாரிகள் என சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் ஜே.வி.பி.யின் வரலாற்றை அறியாதவர்கள். இந்திய எதிர்ப்பு கொள்கையினாலேயே றோஹண விஜேவீர ஜே.வி.பி.யை ஸ்தாபித்தார். ஆனால் இன்று வேறு வழியின்றி இவர்கள் இந்தியாவின் கால்களில் சரணடைந்துள்ளனர்.

எது எவ்வாறிருப்பினும் எந்த ஆட்சி வந்தாலும் மலையக மக்களின் வாழ்க்கை நிலைமை துன்பம் மிகுந்ததாகவே இருக்கும். 2015 – 2019 மாத்திரமே அந்த மக்களுக்கு பொற்காலமாகும். எனவே தேயிலை மலைகளுக்குள் சென்று தொழிலாளர்களின் கைகளை பார்ப்பதை விட, மலையக மக்களுக்கு வீட்டு மற்றும் காணி உரிமையை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியை வலியுறுத்துகின்றோம்.

அவர்களை தொழிலாளர்களாக அன்றி பங்காளிகளாக்க வேண்டும். நாம் இது தொடர்பில் சஜித் பிரேமதாசவுடன் ஒப்பந்தம் செய்திருக்கின்றோம். எமது ஆட்சியில் அதனை நிறைவேற்றுவோம் என்றார்.

sta

தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழக மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்தது பாஜக – மு.க. ஸ்டாலின்

April 18, 2026

“தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழ்நாட்டு மக்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்த பாஜகவுக்கும், அவர்களுடைய ஏவல் அடிமைகளான அதிமுக-வுக்கும்

pi

பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக மக்கள் ஏற்க மாட்டார்கள்

April 18, 2026

“தமிழக கலாசாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,”

po

முன்னாள் எம்.பி சம்பத் அத்துகோரள மீது தாக்குதல்

April 18, 2026

காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள, பிடிகல – பம்பரவான

abu

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸார் தீவிர விசாரணை

April 18, 2026

இலங்கையின் பல பகுதிகளில் பெண்கள் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாகப்

ka

கரந்தெனிய ராஜு” 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை

April 18, 2026

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட “கரந்தெனிய ராஜு” எனப்படும் பாதாள உலகக் குழு சந்தேக நபர், மேலதிக

v

திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்புவது உறுதி – விஜய்

April 18, 2026

அளவில்லாமல் அராஜகத்தையும் ஊழலையும் செய்து, அளவில்லாமல் பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும் லிமிடெட் கம்பெனி திமுகவை இந்தத் தேர்தலில்

tru

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாவிடின் மீண்டும் குண்டுவீச்சு – ட்ரம்ப் எச்சரிக்கை

April 18, 2026

ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும்

ele dea

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

April 18, 2026

ஹாலி-எல, உடுவர பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வயல் நிலத்திற்கு சட்டவிரோதமான முறையில்

hurm

ஹோமுஸ் நீரிணையை ஈரான் இராணுவம் மீண்டும் மூடியது

April 18, 2026

ஈரான் தனது இராணுவத்தின் மூலம் ஹோமுஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டு அரசு

lal

10 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோருகிறார் அமைச்சர் லால் காந்தா

April 18, 2026

தனது 2025-ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான வெளிப்படுத்தலைத் தவறாகச் சித்தரித்து, அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாகக்

bud

வெள்ளை மாளிகையில் உலக அமைதிக்காக பௌத்த மத வழிபாட்டு நிகழ்வு

April 18, 2026

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், உலக அமைதி மற்றும் நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கத்திற்காக ஆசி வேண்டி, கடந்த

sc

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம்

April 18, 2026

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) எச்சரிக்கை