கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைக்க பாதாள உலகத்தோடு தொடர்புகொண்டவர்கள்…

கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் உதவி பெறப்பட்டமைக்கான தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

மீரிகம பொலிஸ் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இந்தக் குற்றச் செயல்கள் ஒரு குறிப்பிட்ட திசையிலேயே வளர்ச்சியடைந்துள்ளன. அரசியல் ஆதரவுடனேயே பாதாள உலகச் செயற்பாடுகளும் போதைப்பொருள் கடத்தலும் விரிவடைந்தன. இதற்குத் தனிப்பட்ட உதாரணங்கள் தேவையில்லை, அரசியல்வாதிகளே இதனை வளர்த்தெடுத்தனர். ஆட்சியதிகாரத்தைத் தக்கவைக்கப் பாதாள உலகத்தையும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளையும் அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர்.

போதைப்பொருள் மூலம் ஈட்டப்பட்ட பணம் இதற்காகப் பயன்படுத்தப்பட்டது. சில அரசியல் கட்சிகளின் கூட்டங்களை ஒழுங்கமைக்கும் பணிகளுக்குப் பாதாள உலகத்தினர் பயன்படுத்தப்பட்டமை தற்போது அம்பலமாகியுள்ளது. இந்தப் பின்னணியைப் புரிந்துகொண்டு தற்போது படிப்படியாக அரசியல் தொடர்புகள் நீக்கப்பட்டு வருகின்றன. பொலிஸார் இதனைக் கட்டுப்படுத்தத் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.”

“போதைப்பொருள் கடத்தல்காரர்களும் பாதாள உலகக் குழுவினரும் ஒரே தரப்பினரே. போதைப்பொருள் கடத்தலின் போது அவர்களுக்குள் ஏற்படும் பிணக்குகள் மற்றும் மோதல்களே இந்தக் கொலைகளுக்குக் காரணமாகின்றன. நாங்கள் இந்தக் கொலைகளை அங்கீகரிக்கவில்லை, அவற்றைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறோம். வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் குழுவினரை ‘சிவப்பு அறிவித்தல்’ மூலம் நாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.”

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டமூலம் ஒன்றை அடுத்த வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் தயாராக உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தச் சட்டமூலம் தற்போது முழுமையாகத் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பித்து, அதனைத் தொடர்ந்து வரும் இரண்டு வாரங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

ramc

சவூதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஹூதிகள் மீண்டும் தாக்குதல்

November 27, 2026

சவூதி அரேபியாவின் ஜசான் (Jazan) நகரில் அமைந்துள்ள ‘சவூதி அரம்கோ’ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது, ஈரான் ஆதரவு பெற்ற

rup

வங்கி கணக்கிலிருந்து மோசடி; அதிகாரி ஒருவர் கைது

November 27, 2026

தனியார் வங்கியொன்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை போன்ற ஒரு இணையதளத்தை உருவாக்கி, தனிநபரின் வங்கி கணக்கிலிருந்து 10 இலட்சம் ரூபாய் மோசடி

sana

அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தினால் ஜனநாயகம் மரணிக்கும் – சாணக்கியன்

November 27, 2026

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதாக குறிப்பிட்டுக் கொண்ட அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் சட்டமானால்

na

திருப்பெருந்துறை வீதியில் அநாதரவாக விடப்பட்ட பெண் மீட்பு

November 27, 2026

மட்டக்களப்பு திருப்பெருந்துறை வீதியில் நோயாளியான பெண் ஒருவர் அநாதரவாக பரிதவிக்க விட்டு சென்ற நிலையில் அவரை பொலிஸார் மீட்டு மட்டு

rain

இலங்கையின் 5 மாகாணங்களில் இன்று பலத்த மழை

November 27, 2026

இலங்கையின் 5 மாகாணங்களில் இன்று (27) சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்

arre

மாவீரர் தின நிகழ்வில் ஈடுபட்ட இளைஞர் கைது

November 27, 2026

மன்னாரில் மாவீரர் தின நிகழ்வில் ஈடுபட்ட 25 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மாவீரர் தின பதாகையொன்றை

images (1)

வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள்

November 27, 2026

தமிழ் இனத்தின் விடிவுக்காகவும், தமிழர்களின் உரிமைக்காகவும் போராடி சாவினைத் தழுவிய வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் இன்றாகும். தமிழர்

net

நெதர்லாந்து கண்டி இராச்சியத்தின் துப்பாக்கிகளை மீள கையளிக்க முடிவு

November 27, 2026

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கண்டி இராஜ்ஜியத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இலங்கைக்கு உரித்தான இரண்டு துப்பாக்கிகளை மீண்டும் நாட்டிற்கே கையளிப்பதற்கு நெதர்லாந்து

sunil sen

இந்து கோயில்களைப் பதிவு செய்ய விசேட வேலைத்திட்டம் – அமைச்சர் சுனில் செனவி

November 27, 2026

மலையக பிரதேசங்களில் உள்ள இந்து கோயில்களை பதிவு செய்யும் பணிகளை துரிதப்படுத்தவும், அதற்கான வசதிகளை வழங்கவும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சர்வமத

arre

சிசு​வை புதைத்த தந்தை கைது

November 27, 2026

தனது திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவிலிருந்த பெண் பிரசவித்த பச்சிளம் குழந்தையை இரகசியமாகப் புதைத்ததாகக் கூறப்படும் 30 வயதுடைய இரு பிள்ளைகளின்

WhatsApp Image 2026-11-26 at 09.25.11

வீரத்தின் அடையாளமாய், தியாகத்தின் வரலாறாய் வாழும் மாவீரர்களை நினைவுகூரும் புனித நாள்…

November 27, 2026

மாவீரர் நாள் நினைவேந்தல் 2026 நிகழ்வு இன்று நவம்பர் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி முதல் Mississaugaவில்

148

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 வீடுகள் திறப்பு

November 26, 2026

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், 8.52 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட 148