எந்தவொரு அரசாங்கமும் அடக்குமுறையை கையில் எடுப்பதென்பது அந்த அரசின் பலவீனமாகும் – ராஜித சேனாரத்ன

எந்தவொரு அரசாங்கமும் அடக்குமுறையை கையில் எடுப்பதென்பது அது அந்த அரசாங்கத்தின் பலவீனமாகும். தற்போதைய அரசாங்கமும் தங்களது இயலாமையை மறைத்துக்கொள்வதற்கே ஆட்சியாளர்களை குற்றப்புலனாய்வுக்கு அழைக்கிறது. மக்கள் இதற்கு மாத்திரம் அரசாங்கத்துக்கு ஆணை வழங்கவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

களுத்துறையில் புதன்கிழமை (04) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியே மக்களின் ஆணையை கோரி இருந்தது. அதன் பிரகாரம் அவர்களின் வாக்குறுதிக்கமையவே மக்கள் அவர்களுக்கு ஆணை வழங்கி இருக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய முக்கியமான வாக்குறுதிகளை மறந்து செயற்பட்டு வருகிறது.

இதனால் அரசாங்கம் தொடர்பில் மக்களுக்கு இருந்துவந்த நல்லெண்ணம் குறைரைடைய ஆரம்பித்துள்ளது. அதனால் அரசாங்கம் அந்த நிலைமையை மாற்றியமபை்பதற்காக முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை விசாரணைக்காக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்க ஆரம்பித்திருக்கிறது.

ஊழல் மோசடியுடன் யாராவது சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களை விசாரணைக்கு அழைப்பதற்கு நாங்கள் எதிர்பில்லை. ஆனால் மக்கள் இதற்கு மாத்திரம் அரசாங்கத்துக்கு ஆணை வழங்கவில்லை. மக்கள் ஆணை வழங்கிய அனைத்து விடயங்களும் இன்று மறுபக்கத்துக்கு திரும்பியுள்ளன.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாக தெரிவித்தார்கள், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மாற்றுவதாக தெரிவித்தார்கள். இவை எதுவும் இடம்பெறவில்லை. அதேபோன்று அரசாங்கத்தின் சுயாதீனத்தன்மை, வெளிப்படைத்தன்மை, நியமனங்கள் எதுவும் அவர்கள் தெரிவித்ததுபோல் செயற்படவில்லை.

அதனால் அரசாங்கத்தின் இயலாமையை மறைத்துக்கொள்வதற்கே தற்போது, ஒருசிலரை குற்றப்புலனாய்வுக்கு அழைத்து வருகிறார்கள். அரசாங்கத்திடம் தற்போது அடக்கு முறை மாத்திரமே எஞ்சி இருக்கிறது. அரசாங்கம் ஒன்று அடக்குமுறையை மேற்கொள்ள தீர்மானிப்பது என்பது அது அந்த அரசாங்கத்தின் பலவீனமாகும். இந்த அரசாங்கமும் தற்போது அதனையே கையில் எடுத்திருக்கிறது.

அதேநேரம் இன்று நாடுபூராகவும் அரச வைத்தியசாலைகளில் வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. வைத்தியர்களின் கோரிக்கைகளில் நியாயம் இருக்கிறது. அதனால் அரசாங்கம் அவர்களுடன் கலந்துரையாடி இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்றார்.

vaiko-0-15505761891-1774239191

“அரசாங்கத்தை முடக்கிப் போடச் சில ஊழல் அதிகாரிகள் நினைக்கிறார்கள்!” – வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு

August 26, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, அரசு நிர்வாகத்தில்

Shahjahan

“சிறுபான்மையினருக்கு முழுச் சுதந்திரம் அளித்த த.வெ.க. அரசு!” – மிலாதுன் நபி விழாவில் அமைச்சர் ஷாஜகான் நெகிழ்ச்சி உரை

August 26, 2026

சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற மிலாதுன் நபி சிறப்பு நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) கட்சியின் பாபநாசம்

1376391

டாஸ்மாக் பணியாளர்கள் விவகாரம்: முதலமைச்சர் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

August 26, 2026

சென்னை: தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் தலையிட்டுச் சுமூகத் தீர்வு காண வேண்டும்

RAJMOHAN3

“விமான நிலையமும் வேண்டும்; விவசாய நிலமும் வேண்டும்!” – பரந்தூர் விவகாரத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி

August 26, 2026

சென்னை: தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரின் 143-வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்குப் பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை

1200-675-27479015-thumbnail-16x9-aadavarjunaoned

“அரசியலில் பெரும்பான்மை – சிறுபான்மை என்ற பேதம் இருக்கக் கூடாது!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முழக்கம்

August 26, 2026

சென்னை: அதாயி கல்விக் குழுமம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட மீலாதுன் நபி விழா மற்றும் சமய நல்லிணக்க மாநாட்டில் அமைச்சர் ஆதவ்

vikatan_2025-01-16_dgwd8njw_Untitled-11

பரந்தூர் நிலங்களை மாற்றுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதா? – த.வெ.க. அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!

August 26, 2026

சென்னை: விவசாயிகளின் நலன் கருதி பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், அங்கு ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மாற்றுத்

nuw

நுவரெலியா கிரகரி வாவியின் நீரை அருந்தினால் உயிருக்கு ஆபத்து?

August 26, 2026

நுவரெலியா கிரகரி வாவியின் நீரை அருந்தினால் உயிரிழக்கும் அபாயம் கூட உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக

1200-675-27486870-thumbnail-16x9-nep-aspera

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்: 37 பேரைத் தேடும் பணி தீவிரம் – மீட்பு நடவடிக்கையில் முதலமைச்சர் விஜய்!

August 26, 2026

சென்னை: நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை மீட்கத் தேவையான அனைத்து

shi

உடனடி மீட்பு பணிகளுக்கு சீன ஜனாதிபதி பணிப்பு

August 26, 2026

நேபாளம் மற்றும் திபேத்தின் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக திபேத்தில் பாதிக்கப்பட்டோர் தொடர்பான விபரங்கள் இன்னும் வௌியாகவில்லை.

ranj

யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பொறுப்பேற்றார்!

August 26, 2026

யாழ். மறை மாவட்டத்தின் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் பணிப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று

tn-governor-rv-arlekar

தமிழ் வழியில் பயின்றோருக்கான அரசுப் பணி முன்னுரிமைச் சட்டத் திருத்தம்: ஆளுநர் ஒப்புதல் – முக்கிய அம்சங்கள் என்ன?

August 26, 2026

சென்னை: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு (PSTM) தமிழ்நாடு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கும் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட புதிய திருத்தத்திற்கு, ஆளுநர்

images - 2026-08-26T203933.756

கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சமா? – அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

August 26, 2026

சென்னை: கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களை அகற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுகிறதா? என இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்குச் சென்னை உயர் நீதிமன்றம்