கனடா பிரம்டன் மாநகரில் ‘பிளாக் ஹிஸ்டரி மந்த்'(Black History Month) ஒரு மாதம் முழுவதும் கொண்டாட்டம், கற்றல் மற்றும் சமூக இணைப்புடன் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது.
பிப்ரவரி 7 அன்று The Rose அரங்கில் நடைபெறும் பிரம்டன் நகரின் சிறப்பு பிளாக் ஹிஸ்டரி மந்த் நிகழ்வுடன் இந்த மாதத்தைத் தொடங்குங்கள் என பிரம்டன் நகராட்சி தெரிவித்துள்ளது. “30 ஆண்டுகளாக பிளாக் ஹிஸ்டரி மந்த்: தலைமுறைகள் கடந்த கருப்பு சமூகத்தின் சிறப்பை கௌரவித்தலே மேற்படி நிகழ்வின் சிறப்பம்சமாகும்.
இந்த மாலை நிகழ்வில் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள், சமூகத் தலைவர்களை கௌரவிக்கும் விருதுகள் மற்றும் மதிப்பிற்குரிய நீதியரசர் ஐர்விங் அன்ரேயின் (Irving Andre) முக்கிய உரை இடம்பெறும்.
முதல் வருகை, முதல் சேவை அடிப்படையில், நுழைவாயிலில் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
பிப்ரவரி மாதம் முழுவதும், அனைத்து வயதினருக்கும் ஏற்ற கலை நிகழ்ச்சிகள், பயிற்சி பட்டறைகள், எழுத்தாளர் உரையாடல்கள், வணிக ஆதரவுகள் மற்றும் கல்வி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் நகரமெங்கும் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.