யாழ். மத்திய கல்லூரியில் நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்ய மறுத்த விளையாட்டு துறை அமைச்சர்!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளின் ஆரம்ப கட்ட நிகழ்வில் வைக்கப்பட்ட நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்ய மறுத்து விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே வெளியேறியுள்ளார்.

நீண்ட காலமாக பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் உள்ள குறித்த நீச்சல் தடாகத்தினை புனரமைப்பதற்கான பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற குழப்பநிலை காரணமாக அவர் வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம், (23) புனரமைப்பு நடவடிக்கையின் ஆரம்ப கட்ட வேலைகளை முன்னெடுக்க விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே யாழ். மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்நிலையிலேயே இந்த குழப்பநிலை ஏற்பட்டதாகவும் அமைச்சர் திரை நீக்கம் செய்ய மறுத்து வெளியேறிதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலத்தில் ஆழம் கூடிய டைவிங் நீச்சல் தடாகம் யாழ். மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

சில வருடங்களிலேயே குறித்த நீச்சல் தடாகம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் தற்போதைய அரசாங்கம் மீளவும் அதனை புனரமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதற்கிடையில், கல்லூரிக்கு விஜயம் செய்த விளையாட்டு துறை அமைச்சர் தடாகத்தை பார்வையிட்டதுடன், புனரமைப்பு பணிகள் தொடர்பில் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது, “டைவிங் நீச்சல் தடாகம் எனும் போது ஒரு குறிப்பிட்டளவானவர்களே பயன்படுத்துவார்கள் என்றும் அதே நேரம் சாதாரணமான ஆழம் குறைந்த நீச்சல் தடாகமாக இதை மாற்றினால் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவார்கள். பொது நிதியில் செய்யும் போது அதிகளவிலானோருக்கு அது நன்மை அளிக்கும் என்று முடிவு எடுத்து அவ்வாறு செய்யலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தடாகத்தை உள்ளவாறே புனரமைத்து தருமாறு ஒரு தரப்பும் சாதாரண நீச்சல் தடாகமாக மாற்றி புனரமைத்தாலும் பிரச்சினை இல்லை என கூறி அமைச்சரின் கருத்தையும் ஏற்று மற்றொரு தரப்பும் கருத்து தெரிவித்ததால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, குறித்த புனரமைப்புக்கான நினைவுக் கல் திரை நீக்கம் செய்ய மறுத்து அமைச்சர் வெளியேறியுள்ளார்.

YGSTQJX7VVEBNAOHQGVMPMEIPY

கடமையின் போது கொல்லப்பட்ட டொராண்டோ போலீஸ் அதிகாரியின் இறுதி ஊர்வலம்

June 24, 2026

இந்த மாத தொடக்கத்தில் கடமையின் போது சுட்டுக் கொல்லப்பட்ட, அவசரப் பணிப் படையின் (ETF) 43 வயதுடைய உறுப்பினர் கான்ஸ்டபிள்

10

”முதல்-அமைச்சர் பேச்சைக் கேட்டு திணறி திமுக வெளியேறியது!” – அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

June 24, 2026

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில், முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆற்றிய பதிலுரை எதிர்க்கட்சிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது உரையின்போது

9

ரஜினிகாந்தின் ‘தர்மன்’ பட அறிவிப்பு விழா – முதல்-அமைச்சர் விஜய்க்கு ஆதரவா?

June 24, 2026

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது படத்திற்கு ‘தர்மன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அஸ்வத்

982673

தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வருத்தப்படுகின்றனர் – சென்னை மேயர் பிரியா!

June 24, 2026

சென்னை: சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த

7

மின் வாரியத்தில் 401 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய்!

June 24, 2026

சென்னை: கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், மின்சார வாரியத்திற்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 401 பேருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய்

6

பாஜக+திமுக+அதிமுக எனும் கொள்கை புடலங்காய் சிபிஐ(எம்)-க்கு எப்போதும் இல்லை! – போஸ்டரால் பரபரப்பு

June 24, 2026

சென்னை: தமிழக அரசியல் களத்தில் தவெக அரசுக்கான ஆதரவு விவகாரம் பெரிய பிளவை உருவாக்கியுள்ளது. தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்ததற்காக

5

தைலாபுரத்தில் இன்று ராமதாஸ்-அன்புமணி சந்திப்பு: கட்டியணைத்து அழுத தந்தை ராமதாஸ்!

June 24, 2026

திண்டிவனம்: பாமக-வின் பிளவு மற்றும் ராமதாஸ் – அன்புமணி இடையேயான கருத்து வேறுபாடுகளால் கடந்த சில மாதங்களாக அக்கட்சியின் செயல்பாடுகள்

arrestt

36 கிலோ கிராம்  (Hashish) -கனடா பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

June 24, 2026

சுமார் 35 கிலோ கிராமிற்கும் அதிக எடையுடைய கஞ்சா (Hashish) போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் 18 வயதுடைய

730732303_1036117958871627_4138093801309942397_n

பொலிசாருக்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம்!!

June 24, 2026

கடந்த 22. 06.2026 அன்றைய தினம் கிளிநொச்சி பொலிஸ் நிலைய முன்பாக பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பொழுது அதிவேகமாக

images (11)

கேப்பாபுலவு பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி தொடர் போராட்டத்தில் குதித்த மக்கள் ; ஆளுநரிடம் அவசர கோரிக்கை

June 24, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு பகுதியில் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி மக்கள் இராணுவ படைத்தலைமையகத்தின் முன்பாக இன்று (24)

parliment

16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய இலங்கை நடவடிக்கை

June 24, 2026

சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களை (Social media platforms) அணுகுவதைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தனிநபர் சட்டமூலம் (Private Member’s

4

சட்டமன்றத்தை Shooting Spot ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல! – ஜெயக்குமார் ஆவேசப் பதிவு!

June 24, 2026

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் திமுக-வை நையாண்டி செய்து பேசிய குட்டிக்கதை, எதிர்க்கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.