“மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி!” – சட்டப்பேரவையில் சவுமியா அன்புமணி, பிரேமலதா சரமாரி குற்றச்சாட்டு; அமைச்சர் கீர்த்தனா விளக்கம்!

சென்னை
தமிழக சட்டப்பேரவையில் இன்று நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி (NLC) நிறுவனம் குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது. பாமக மற்றும் தேமுதிக உறுப்பினர்களின் கடுமையான குற்றச்சாட்டுகளுக்குத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா விரிவான விளக்கம் அளித்தார்.
பாமக எம்.எல்.ஏ சவுமியா அன்புமணி ஆவேசம்:
“தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்றால் அது என்.எல்.சி நிறுவனம்தான். சி.எஸ்.ஆர் (CSR) நிதியை அந்த நிறுவனம் முறையாக வழங்குகிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். விவசாயிகளின் விளைநிலங்களை அழித்து, தண்ணீரையும் உறிஞ்சி எடுத்துவிட்டு அப்பகுதி மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. நிலம் கொடுத்த மண்ணின் மைந்தர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தி வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள்; இது என்ன மருத்துவப் படிப்பா? என்.எல்.சி நிறுவனம் கொடுக்கும் எந்தத் தகவலுமே உண்மைக்குப் புறம்பானதாகவே இருக்கும்,” என்று அவர் கடுமையாகச் சாடினார்.
அமைச்சர் கீர்த்தனாவின் அதிரடி விளக்கம்:
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, “விவசாயிகளுக்குப் பிரச்சினை என்றால் முதலமைச்சர் விஜய் எப்போதும் விவசாயிகள் பக்கம்தான் நிற்பார். என்.எல்.சி நிறுவனம் குறித்து உறுப்பினர்கள் தெரிவிக்கும் புகார்களை விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது; அந்த விவரங்கள் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். நாங்கள் யாருக்கும் எதிராக நடக்க மாட்டோம், விவசாயிகளுக்கும் மக்களுக்கும் அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். நிர்வாகத்தின் மீது தவறு இருந்தால் அரசு நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கும்,” என்று உறுதியளித்தார்.
தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு:
இதனைத் தொடர்ந்து பேசிய தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த், “என்.எல்.சி நிறுவனத்தால் விருத்தாசலத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நீரில் கால்சியம் அதிகம் இருப்பதால் மக்களுக்குக் கிட்னி பாதிப்பு அதிகமாக உள்ளது; எனவே கூட்டுக் குடிநீர்த் திட்டம் வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம். நிலம் கொடுத்த விவசாய மக்களுக்கு இன்றுவரை உரிய இழப்பீட்டுத் தொகையை என்.எல்.சி நிர்வாகம் வழங்கவில்லை. என்.எல்.சி-யால் விருத்தாசலம் தொகுதி மக்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என்பதே உண்மை,” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
#NLCIssue #TNAssembly #SowmiyaAnbumani #PremalathaVijayakanth #MinisterKeerthana #ChiefMinisterVijay #TVKGovernment #Neyveli #TNPolitics #TamilNaduNews #ChennaiNews #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates
va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ