நேற்று (10) 76ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு) மற்றும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ ஆகியோரின் பரிந்துரையின் பேரில், போரில் காயமடைந்த 05 பிரிகேடியர்களுக்கு அவர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அவர்களை மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு அளித்துள்ளார்.