6 தமிழ்பேசும் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித்தலைவரும் சந்திப்பு!  

தமிழ்பேசும் மக்களின் நலன்களை முன்னிறுத்தி ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை கடந்த மாதத் தொடக்கத்தில் அறிவித்த 6 தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நாளை திங்கட்கிழமை (3) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவையும், எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவையும் தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 தமிழ்பேசும் அரசியல் கட்சிகளும் தமது சுயாதீனத்துவத்தையும் கொள்கைகளையும் அரசியல் நிலைப்பாடுகளையும் பேணிக்கொண்டு, பொது இணக்கப்பாடு எட்டப்படும் விடயங்களில் தமிழ்பேசும் மக்களின் நலனை முன்னிறுத்தி ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்படுவதற்கு உடன்பட்டிருந்தன.

அதன் நீட்சியாக, தமிழ்பேசும் மக்களைப் பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியை சந்திப்பதற்கு நேரமொன்றை வழங்குமாறு அக்கட்சிகளின் பிரதிநிதிகள் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே  திங்கட்கிழமை (3) மு.ப 10.00 மணிக்கு மேற்படி 6 தமிழ்பேசும் அரசியல் கட்சிகளினதும் பிரதிநிதிகள் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இச்சந்திப்பின்போது விசேடமாக புதிய அரசியலமைப்பு உருவாக்கம், காலந்தாழ்த்தப்பட்டுவரும் மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்துதல் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவித்தல் ஆகிய 3 விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் விசேடமாகக் கலந்துரையாடப்படவுள்ளது.

இவற்றுடன் மலையக தமிழ்மக்களுக்கான வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்தல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல், அரசியல் கைதிகளை விடுவித்தல், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் குறித்தும் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதேவேளை நாளைய தினம் பி.ப 3.30 மணிக்கு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்திக்கவுள்ள மேற்படி 6 கட்சிகளினதும் பிரதிநிதிகள், அவருடனும் மேற்குறிப்பிட்ட விடயப்பரப்புக்கள் உள்ளடங்கலாக தமிழ்பேசும் மக்களின் நலன் சார்ந்த விடயங்கள் குறித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

8

“கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உதயநிதி உண்மைக்குப் புறம்பான தகவல் – தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் முறையீடு”

November 25, 2026

சென்னை: மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து

the

மாவீரர் துயிலும் இல்ல பசுமைத் திட்டத்திற்கு லண்டன் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் உதவி

November 25, 2026

மாவீரர்களின் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் என்றும் நினைவில் நிறுத்தி, அவர்களின் நினைவிடங்களைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கில் லண்டன் ஸ்ரீ கற்பக விநாயகர்

7

“கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குகிறதா? – அமைச்சர் அருண்ராஜ் பதில்”

November 25, 2026

சென்னை: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குவது ஏன் என்ற கேள்விக்கு

6

“தவெக எம்.எல்.ஏ. மீது பாலியல் தொல்லை புகார் அளித்த கலெக்டரிடம் விசாரணை”

November 25, 2026

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டருக்கு அம்மாவட்ட தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் தனது செல்போனில் இருந்து ஆபாச குறுஞ்செய்திகளை

5

“முதலீட்டாளர்களுக்கு தொழில் தொடங்குவதுடன் ஏற்றுமதி வரை ஆதரவு – அமைச்சர் கீர்த்தனா உறுதி”

November 25, 2026

சென்னை: சென்னை கோவளத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, முதலீட்டாளர்களுக்கு தொழிற்சாலை

3

“தவெக ஆட்சியை கவிழ்க்க சில ஐஏஎஸ் அதிகாரிகள் சதி – வைகோ பரபரப்பு பேச்சு”

November 25, 2026

சென்னை: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்ற \”வைகோ இன் பார்லிமெண்ட்\” நூல் மறுவெளியீட்டு விழாவில் உரையாற்றிய

2

“திமுக நிர்வாகிகள் மீதான புகார் என்றால் காவல்துறை விரைந்து செயல்படுகிறது – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு”

November 25, 2026

சென்னை: பல்வேறு பிரச்சினைகளில் நடவடிக்கை கோரி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஐஜி அவினாஷ்

WJYLHQPJA5BFTNQ3J6KQ4PJF44

காசா லோமா அருகே வீடு புகுந்து தாக்குதல்: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

November 25, 2026

டொரொன்டோ, நவ. 25: கனடாவின் டொரொன்டோ நகரில் உள்ள காசா லோமா (Casa Loma) பகுதியில் புதன்கிழமை (25) அதிகாலை

canada airport2

குற்றப் பின்னணி கொண்ட சுமார் 7,000 கனேடிய விமான நிலைய ஊழியர்களுக்குப் பாதுகாப்பு அனுமதி

November 25, 2026

டொரொன்டோ, நவ. 25: கனடாவின் விமான நிலையங்களில் பின்னணிப் பணிகளில் ஈடுபடுவதற்காக, குற்றப் பின்னணி கொண்ட சுமார் 7,000 ஊழியர்களுக்குப்

WZ3QMADJBNBSJKXVBHNKXGCUYE

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் கனடாவின் நலன்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்: ட்ரம்ப் பிரதிநிதி ஜேமிசன் கிரியர்

November 25, 2026

அலுமினியம் மற்றும் வாகனத் துறைகளில் பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், டிசம்பர் ஜி20 உச்சிமாநாட்டிற்கு முன்னர் சந்திக்க வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல்

mv

நெல்லியடியில் மாவீரர் நினைவாலயம் அங்குரார்ப்பணம்!

November 25, 2026

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் நெல்லியடியில் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம் இன்று (25) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

trupm

அமெரிக்கா தனது மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளான சில நாடுகள் மீது புதிய வரி விதிப்பு!

November 25, 2026

அமெரிக்கா தனது மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளான சில நாடுகள் மீது புதிய இறக்குமதி தீர்வை வரிகளை அறிவித்துள்ளது. உற்பத்தித் துறைகளில்