5000 கலைஞர்களின் பரதநாட்டிய கின்னஸ் சாதனை முற்சியில் பண மோசடி; அமைச்சர் மீது முறைப்பாடு!

கொழும்பு, காலிமுகத்திடலில் அண்மையில் 5,000 பரதநாட்டியக் கலைஞர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட கின்னஸ் சாதனை முயற்சியின் பின்னணியில், திட்டமிட்ட பாரிய பண மோசடி மற்றும் உழைப்புச் சுரண்டல் அரங்கேறியுள்ளன என்று கூறி, இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசாரச் செயலாளரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான துமிந்த நாகமுவ ஆகியோர் இணைந்து இந்த முறைப்பாட்டை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளனர்.

முறைப்பாட்டைச் சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்கள், கடந்த ஜூன் 14ஆம் திகதி நடைபெற்ற இந்த நாட்டிய நிகழ்வானது, கலைச் சாதனை என்ற போர்வையில் இலங்கையிலுள்ள ஏழைத் தமிழ் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை ஏமாற்றி நடத்தப்பட்ட ஒரு அப்பட்டமான வணிகச் செயற்பாடு எனத் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

பெருந்தோட்டம் மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் உத்தியோகபூர்வ முகப்புத்தகப் பதிவுகளின்படி, அவரது நேரடி வேண்டுகோள் மற்றும் வழிகாட்டலின் கீழேயே ‘சங்கமம் குளோபல் அகாடமி’ மற்றும் ‘சங்கமளியா ஹாலிடேஸ்’ ஆகிய தனியார் நிறுவனங்கள் இந்த நாட்டிய நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஓர் அரச பிரதி அமைச்சர் நேரடியாகச் சம்பந்தப்பட்ட தேசிய அளவிலான விவகாரத்தில், முற்றிலும் தனியார் நிறுவனங்கள் மூலம் நாட்டிய மாணவர்களிடமிருந்து தலா 4,500 ரூபா முதல் 6,000 ரூபா வரை நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு, அவை அரச திறைசேரிக்குச் செல்லாமல் தனியார்களின் பெயர்களிலுள்ள வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளன என்று அவர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர்.

இந்த நிகழ்வுக்கு எந்தவொரு அமைச்சோ அல்லது அரச துறையோ முறையான நிதி உத்தரவாதத்தையோ அல்லது தணிக்கைக் கட்டுப்பாட்டையோ வழங்கவில்லை.

இது போன்றதொரு வரலாற்று நிகழ்வை இலங்கை கலாசார அமைச்சு அல்லது சுற்றுலாத்துறை அமைச்சு மூலம் உத்தியோகபூர்வமாக நடத்தியிருந்தால், அதன் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான வருமானம் நாட்டுக்குக் கிடைத்து மீண்டும் எமது மக்களுக்கே சென்றிருக்கும். ஆனால், இங்கு தனியாருக்குச் சாதகமான முறையில் பிரதி அமைச்சர் சட்டவிரோதமாகச் செயற்பட்டுள்ளார் என்று அவர்கள் சாடினர்.

தற்போது பிரம்மாண்ட நிகழ்வு முடிவடைந்த பின்னரும், மாணவர்களுக்கான பங்களிப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்காக அந்தத் தனியார் நிறுவனங்கள் மேலும் 2,500, 3,000 மற்றும் 12,000 ரூபா எனத் தொடர்ந்து பணம் கேட்டுப் பெற்றோர்களை வற்புறுத்தி வருவதாகத் தெரிவித்த செயற்பாட்டாளர்கள், தூரப் பிரதேசங்கள் மற்றும் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் இருந்து வந்த நடுத்தர வர்க்க மாணவர்களுக்குத் தங்குமிடமோ, உணவோ அல்லது பாதுகாப்போ ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், சொந்தச் செலவில் வந்த மாணவர்களுக்கு 25,000 முதல் ஒரு இலட்சம் ரூபா வரை கடன் சுமை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிட்டனர்.

இலங்கை மாணவர்களின் அரும் உழைப்பையும், கலைத் திறனையும் சுயநலமாகப் பயன்படுத்தி, இந்தியாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனமும், ஒரு நாட்டிய ஆசிரியை மட்டுமே உலகச் சாதனைப் பட்டத்தைப் பெறுவதற்காக எமது நாட்டு மக்களின் உழைப்பு கொடூரமாகச் சுரண்டப்பட்டுள்ளது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

8

இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்களின் இட ஒதுக்கீட்டு நலன்களை பாதுகாக்க வேண்டும் – பெ.சண்முகம்

June 27, 2026

‘சென்னை: மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் சமீபத்திய தீர்ப்பு, சமூக

7

உலக தமிழ் மாநாடு நடத்துவது குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு வரும் – அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி

June 27, 2026

‘சென்னை: ம.பொ.சி. சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், உலகத் தமிழ் மாநாடு குறித்த எதிர்பார்ப்புகளைப்

6

வைகோவுடன் மோதல்- திமுகவில் இணையும் 2 மதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

June 27, 2026

‘சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கும், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கொள்கை மோதல்கள் முற்றிப்போய், இன்று இரு எம்.எல்.ஏ.க்கள் திமுகவில்

canada policee aaa

டார்ட்மவுத் (Dartmouth) பகுதியில் துப்பாக்கிச் சூடு: 39 வயது நபர் பலி

June 27, 2026

டார்ட்மவுத் பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஹாலிஃபாக்ஸ் பிராந்திய காவல்துறையினர்

GMJMLNA2EXY7FESC4EYUSQW72Q

டொராண்டோ நகரின் மையப்பகுதியில் விபத்து: ஒருவர் காயம், தப்பியோடிய இரு சந்தேகநபர்களைத் தேடும் காவல்துறை

June 27, 2026

டொராண்டோ நகரின் மையப்பகுதியில் (Downtown) சனிக்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்ற இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் சிறு காயங்களுக்குள்ளான

MGI7KLC6XNFF7BPVXHBN5K6LFM

பிராம்ப்டனில் மோதிவிட்டு தப்பிய வாகனம்: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி

June 27, 2026

கனடா, பிராம்ப்டன் (Brampton) நகரில் இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்ற ‘மோதிவிட்டு தப்பியோடிய’ (Hit-and-run) வாகன விபத்தில் மோட்டார் சைக்கிள்

729375397_1246220910798013_4024349540228563499_n

கொலைக் குற்றச்சாட்டில் தேடப்படும் நபர் டொராண்டோவின் ‘ஹை பார்க்’ (High Park) அருகேகாணப்பட்டுள்ளார்

June 27, 2026

இரட்டைக் கொலைச் சம்பவம் (Double homicide) தொடர்பாக கனடா தழுவிய பிடியாணை (Canada-wide warrant) பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வரும் ஜோர்டான்

4

உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடியா? – அன்புமணி ராமதாஸ்

June 27, 2026

‘சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு முடிவுகள்

3

திமுக கூட்டணியில் இருந்து விலகியது மதிமுக: பொதுக்குழுவில் நிறைவேறியது தீர்மானம்

June 27, 2026

‘சென்னை: சுமார் 9 ஆண்டுகளாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்து வந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்

2

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரை டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

June 27, 2026

‘சென்னை: டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட் நாராயணாவை தவெக அரசு நியமித்துள்ள விவகாரம் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

photo-collage.png

5000 கலைஞர்களின் பரதநாட்டிய கின்னஸ் சாதனை முற்சியில் பண மோசடி; அமைச்சர் மீது முறைப்பாடு!

June 27, 2026

கொழும்பு, காலிமுகத்திடலில் அண்மையில் 5,000 பரதநாட்டியக் கலைஞர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட கின்னஸ் சாதனை முயற்சியின் பின்னணியில், திட்டமிட்ட பாரிய பண

muk

மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

June 27, 2026

முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்விளான் கிராம அலுவலர் பிரிவில், கல்விளான் குளத்தில் மூழ்கி 26 வயதுடைய